தாங்க முடியல.. ரொம்ப ஓவரா போகுது.. கண்டிச்சு வைங்க.. டாப் நடிகருக்கு ஆர்டர் போட்ட பிரபலம்!
சென்னை: தயாரிப்பாளரை ஆபாசமாக அந்த நடிகரின் ரசிகர்கள் திட்டி வருவதால், தயாரிப்பாளர் டென்ஷன் ஆகி உள்ளாராம்.
மனைவி மூலமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, டாப் நடிகரின் முதல் படத்தை தயாரித்த அந்த தயாரிப்பாளர், இயக்குநரின் கண்டிஷன் பேரில் இரண்டாவது படத்தையும் தயாரித்து வருகிறார்.
தொடரும் ரசிகர்களின் அத்துமீறல் பேச்சுக்களால் மனமுடைந்து போயுள்ள அவர், டாப் நடிகரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளாராம்.

கெட்ட வார்த்தை
டாப் நடிகர் படம் குறித்த அப்டேட்டுக்கு பதிலாக, பவர் நடிகர் படம் குறித்த அப்டேட்டை அந்த தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள நிலையில், டாப் நடிகரின் ரசிகர்கள், ஏகபோகமாக ட்ரோல் செய்து வருகின்றனர். கிண்டலாக ட்ரோல் செய்தால் கூட பரவாயில்லை. வரம்பு மீறி, அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

நிம்மதியே போச்சு
பவர் நடிகரின் படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்பில் ஈடுபட்டு வரும் அந்த தயாரிப்பாளருக்கு, டாப் நடிகரின் ரசிகர்கள் செய்யும் அட்டூழியத்தால், நிம்மதியே போயுள்ளதாம். தயாரிப்பாளரை கேலிச்சித்திரம் ஆக்கி, பல விதமான ஆபாச மீம்களும், சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளதால், அவர் ரொம்ப டென்ஷன் ஆகி இருக்கிறாராம்.

வச்சிக்கிட்டா வஞ்சனை
அந்த படம் வெளிவர இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இப்பவே ஏன் தொல்லை பண்றாங்க, நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் என இயக்குநரை அழைத்து புலம்பியுள்ளாராம். மேலும், இந்த மோசமான செயல் தொடர்ந்தால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்துள்ளாராம்.

ரிலீஸ் தேதி மாற்றம்
மேலும், அந்த பெரிய பண்டிகைக்கு அந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, படத்தின் ஷூட்டிங் முடியவே இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும் என்றும், அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் செய்ய முடியும் என்ற தகவலும் கசிந்து, அந்த டாப் நடிகரின் ரசிகர்களை கடுப்பேற்றியது தான் அவர்கள் இப்படி கோபப்பட காரணம் என்கின்றனர்.

வார்ன் பண்ணுங்க
இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகாது. படம் வெளியே வருவது உறுதியானவுடன், ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்தவுடன் தான் எல்லா அப்டேட்களையும் விட முடியும். உங்க ரசிகர்களை கொஞ்சம் வார்ன் பண்ணி வைங்க, தாங்க முடியல, என் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்றாங்க என அந்த டாப் நடிகரிடம் அன்பு கட்டளையும் போட்டுள்ளாராம் அந்த தயாரிப்பாளர்.

ஏதாவது கொடுக்கலாமா
தயாரிப்பாளர் மீது இத்தனை கோபத்தில் இருக்கும் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதத்தில் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போட்டோவாவது வெளியிடலாம். ஏதாவது கொடுத்தால் மட்டுமே அவங்களை ஆஃப் பண்ண முடியும் என இயக்குநர் சொன்ன யோசனையை படக்குழு பரிசீலித்து வருகிறதாம். விரைவில், அந்த டாப் நடிகரின் படம் குறித்த ஒரு மாஸ் அப்டேட் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











