வாரிசு நடிகரின் முன்னாள் மனைவிக்கு பண்ணை வீடு பரிசு.. மகனுக்காக தயாரிப்பாளர் செய்த வேலை!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அந்த பேபி நடிகைக்கு, கடந்த சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லாமல் இருக்கிறது. இதனால் பலவிதமான சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி வரும் அந்த நடிகைக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தயாரிப்பாளர் ஒருவர், அந்த நடிகைக்கு பண்ணை வீட்டை பரிசாக கொடுத்ததாக தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
சென்னையை பூர்வீகமாக கொண்ட அந்த நடிகை, ஆரம்ப காலத்தில் சுமாரான படங்களில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பெயர் சொல்லும் வகையில் ஒரு திரைப்படம் அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து தனது இமேஜை உயர்த்தி கொண்டார் அந்த பேபி நடிகை.

காதலுக்கு பச்சை கொடி: அதன் பிறகு, வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அவருடன் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர, அவர்களும், காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டதால் இவர்களின் திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்கலாம் என வாரிசு நடிகர் சொல்ல, பேபி நடிகையும் உத்வேகத்துடன் நடித்தார்.திருமணத்திற்கு பின்பு தான், பேபி நடிகைக்கு சினிமா வாழ்க்கை சூடுபிடித்து, அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
ஆனால், வாரிசு நடிகருக்கோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லாததால், இருவருக்கும் இடையே ஈகோ வர அது குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேபி நடிகைக்கு பல கண்டிஷன்களை போட, திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இவர்களின் காதல் கசந்து போக, இருவரும் பிரிய முடிவு எடுத்து, அறிக்கையை வெளியிட்டு விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
உதவிய தயாரிப்பாளர்: விவாகரத்து முடிவுக்கு பிறகு தான் அம்மணிக்கு போதாத காலம் ஏற்பட்டு, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கையில் இருந்த போதும் தனக்கு ஏற்பட்ட அரிய வகை நோயால் படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வந்தார். மேலும் சிகிச்சைக்கும் லட்ச கணக்கில் பணம் தேவைப்பட்டதால், கையில் இருந்த காசும் குறைய ஆரம்பித்ததால், அந்த பேபி நடிகை கவலையில் இருந்தார். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் 25 லட்சத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.
பண்ணைவீடு பரிசு: அதைத்தொடர்ந்து, தனது மகனே கதாநாயகனாக வைத்து எடுக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்குமாறு, முன்னணி நடிகையின் படத்தில் மகன் கதாநாயகனாக நடித்தால், அவனுக்கு சினிமாவில் நல்ல ஓபனிங் கிடைக்கும் என்று சொல்ல, பேபி நடிகையும், தக்க நேரத்தில் அவர் உதவி செய்ததை மனதில் வைத்துக்கொண்டு அந்த படத்திலும் நடித்து கொடுத்துள்ளார். மேலும், அந்த படத்தில் பேபி நடிகை நடித்ததற்கு கேட்ட பணத்தையும் கொடுத்து, தனக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்றையும் அந்த பேபி நடிகைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை அந்த தயாரிப்பாளர் ஊடகம் ஒன்றில் சொல்ல மீடியாக்களில் அது தற்போது பேசு பொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











