‘அதுக்குள்ளேயே இப்டியா’.. நடிகரின் காதலியைப் பார்த்து பயந்து ஓடும் தயாரிப்பாளர்கள்!
ஒரு முன்னணி நடிகையை பார்த்து தயாரிப்பாளர்கள் பயந்து ஓடுவதாக செய்தி வந்துள்ளது.
சென்னை: அபாரமான நடனத் திறமையோடு, நடிக்கவும் தெரிந்ததால் இந்த மும்பையில் இருந்து வந்த நடிகையை தமிழ்த்திரையுலகம் இருகரம் கூப்பி வரவேற்றது. நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரங்களும் அவருக்குக் கிடைத்தன.
குடும்பப்பாங்கான வேடம் கொடுத்தாலும், அதிலும் லேசாக கவர்ச்சியை புகுத்தி ரசிகர்களைக் கிறங்கடித்தார். இதனால் இயக்குநர்கள் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டினர்.
ஆனால், கேமராவிற்கு முன்பு காட்டும் அந்த ஒழுங்கை, கேமராவிற்கு பின்புறம் காட்டுவதில்லையாம் நடிகை. படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கே தனது மும்பை நண்பர்களை வரவழைத்து சிரித்துப் பேசி ரகளை பண்ணுகிறாராம்.

மும்பை நண்பர்கள்:
சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கேரவனை விட்டு வெளியே வரவும் மறுக்கிறாராம். தனக்கு மும்பையில் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டவே நடிகை இப்படியெல்லாம் செய்கிறாராம். ஆனால், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை தன் படங்களில் நடிக்க வைக்க தயங்குகின்றனராம் இயக்குநர்கள்.

படவாய்ப்புகள் குறைந்தது:
அறிமுகமான புதிதிலேயே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி மற்ற நடிகைகளின் வயித்தெரிச்சலை அதிகமாகக் கொட்டிக் கொண்டார். ஆனால், தனது நண்பர்களால் வளர்ந்த வேகத்திலேயே அவரது பட வாய்ப்புகளும் வீழ்ந்து விட்டன.

காதல் கிசுகிசு:
இதற்கிடையே பிரபல நடிகருடன் காதல் என்ற கிசுகிசுவும் வேறு உலா வருகிறது. விரைவில் அவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனாலும் நடிகையை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்களாம்.

ஹேப்பி அண்ணாச்சி:
தமிழின் முன்னணி நடிகையாக வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நடிகை, சில படங்களிலேயே இப்படி அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கி இருப்பது அவரது நட்பு வட்டாரத்தை வருத்தப்பட வைத்துள்ளது. ஆனால், நடிகையின் படவாய்ப்புகள் தங்களுக்கு கைமாறி வருவதால் மற்ற நடிகைகள் ஹேப்பி அண்ணாச்சி.


Click it and Unblock the Notifications











