இதுக்கு மேல செலவு பண்ண முடியாது.. வம்பு நடிகரை தொடர்ந்து ஒல்லி நடிகராலும் டென்ஷனான தயாரிப்பாளர்?
சென்னை: எப்படியாவது பிளாக்பஸ்டர் கொடுத்து விட வேண்டும் என வரிசையாக நல்ல நல்ல இயக்குநர்களையும், நல்ல நல்ல பெரிய ஹீரோக்களையும் வைத்து படம் பண்ணினாலும் அந்த தயாரிப்பாளருக்கு பெரிதாக வெற்றிக்கிடைக்கவே மாட்டேங்குதே என்கிற ஆதங்கம் மட்டும் தான் என கோடம்பாக்கமே புலம்பிக் கொண்டிருக்கிறது.
பெரிய பெரிய ஜோசியர்களையும் முனிவர்களையும் பார்த்து பல யாகங்களையும் பல பரிகாரங்களையும் செய்தாலும் தயாரிப்பாளர் தொட்டது எல்லாம் தாமதமாவதும் ரிலீஸ் ஆனால் பல்பு வாங்குவதுமாகவே உள்ளது.

ஏற்கனவே வம்பு நடிகரை வைத்து அதிக செலவு பண்ணி எல்லாமே டோட்டல் வேஸ்ட்டாகி ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் ஆன நிலையில், தற்போது ஒல்லி நடிகர் படமும் என்ன ஆகும் என்கிற பயம் நிறையவே வந்துவிட்டது என்கின்றனர்.
படத்துக்கே அதிக செலவு: டைரக்டர் சொன்ன பட்ஜெட்டை விட வழக்கம் போல இந்த படத்துக்கும் அதிக செலவு ஆகிவிட்டது என தயாரிப்பாளர் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டாராம். அதற்கு காரணம் படத்தை சுற்றி எந்தவொரு பாசிட்டிவ் வைப்ரேசனையும் இதுவரை அவர் பார்க்கவில்லை என இயக்குநரிடம் கடிந்துக் கொண்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இப்போதைக்கு ஹீரோவுடன் முறைத்துக் கொண்டால் வேலைக்கு ஆகாது என்பதால் அமைதியாக உள்ளார் என்கின்றனர்.
இனிமே செலவு செய்ய முடியாது: வம்பு நடிகருக்காக வானளாவிய புரமோஷனை செய்த தயாரிப்பாளர் இந்த முறை ஒல்லி நடிகர் படம் வருவது கூட யாருக்குமே தெரியாத அளவுக்கு புரமோஷனுக்கு கூட காசு கொடுக்க மாட்டேன் என கறாராக சொல்லிவிட்டாராம். அதனால் தான் டைரக்டர் தனியாக படத்திற்கு புரமோஷனே ரசிகர்கள் தான் உருடிட்டிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர்.
இந்த முறை மிஸ் ஆனால்: ஏற்கனவே ஒல்லி நடிகர் நடிக்கும் படங்களுக்கும் தமிழ்நாட்டில் ஓபனிங் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் நிரம்புவது ரொம்பவே குறைந்து விட்டது. புதுமுக நடிகர்கள் எல்லாம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அந்த இளைஞரை வசூலில் முந்த வேண்டும் என்கிற அழுத்தமும் அதிகமாகவே உள்ளது. இந்த முறை மிஸ் ஆனால், அடுத்த படத்துக்கும் இது பெரிய நெகட்டிவாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் தலைவலியுடன் உட்கார்ந்திருக்கிறாராம். ஏற்கனவே அந்த சாமி படம் என்ன நிலையில் இருக்கு என்றே தெரியவில்லை என அப்செட்டில் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications