4 பெரிய நடிகைகளுக்கு எண்ட் கார்டு போட முடிவா?.. இதுக்கு மேல ஆட்டம் போட உடம்புல தெம்பு இல்லையாம்?
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த 4 பெரிய நடிகைகள் ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிடும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் திடீரென சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வந்த அந்த நடிகைகள் அவர்களுக்குப் பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்த இளம் நடிகைகளை எல்லாம் ஃபீல்ட்டை விட்டு ஓடும் அளவுக்கு பல்வேறு விஷயங்களை செய்து தொடர்ந்து தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே மாஸ் நடிகரின் சிண்டிகேட்டில் அந்த நடிகைகள் ரொம்பவே நட்பு வட்டத்தில் இருந்தது தான் என்கின்றனர். தற்போது மாஸ் நடிகர் சினிமாவை விட்டு வெளியேற உள்ள நிலையில், இந்த 4 நடிகைகளுக்கும் இனிமேல் சான்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் என்றும் அடுத்து அந்த இடத்தை நிரப்ப உள்ள தமாஸ் நடிகர் இளம் நடிகைகள் தான் தனக்கு வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருப்பது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
டூயட் பாடவும் குத்தாட்டம் போடவும்: இந்திய சினிமாவிலேயே நடிகைகளுக்கு பெரும் முக்கியத்துவத்தை எல்லாம் இயக்குநர்கள் திரைக்கதையில் எழுதாமல் இருக்க காரணமே ஹீரோக்கள் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் தங்கள் ஷோல்டரில் தாங்கி சுமக்க வேண்டும் என்று பேராசை படுவதுதான் காரணம் என்கின்றனர். அதன் காரணமாகவே நன்று நடிக்கத் தெரிந்த நடிகைகளை எல்லாம் ஹீரோயின்களாக வளர்த்து விடாமல் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை மட்டுமே நடிகர்கள் வளர்த்து விடுவதாக கூறுகின்றனர்.
வயசாகிடுச்சு உடம்புல தெம்பு இல்லை: டாப் நடிகைகளாக இன்னமும் கோலிவுட்டில் அந்த 4 நடிகைகள் வலம் வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டே அந்த நடிகைகளுக்கு பெரும்பாலும் பட வாய்ப்புகள் இல்லை என்றும் விஆர்எஸ் வாங்கிக் கொண்டு வெளிநாட்டு தீவில் ஓய்வெடுங்க என்றே சில தயாரிப்பாளர்கள் நடிகைகளை புக் பண்ணாமல் டாட்டா காட்டி வரக் காரணமே அந்த தமாஸ் நடிகர் இந்த நடிகைகள் மீதெல்லாம் விருப்பம் செலுத்தாதது தான் என்கின்றனர். மேலும், இந்த நடிகைகளில் அதிகபட்சம் 3 பேர் நடனமாடுவதே கிடையாது என்றும் வயசாகிடுச்சு என்பதால் உடம்பில் கொஞ்சம் கூட தெம்பில்லை என்று கூறுகின்றனர்.
அடுத்து என்ன?: ஒரு நடிகை மட்டும் இன்னமும் டான்ஸ் ஆட முடியும் என நிரூபித்து சில பட வாய்ப்புகளை பிடித்து வந்தாலும், அவருக்கும் அடுத்த ஆண்டு சான்ஸ் இல்லை என்கிற நிலைமை உருவாகி விட்டதாக கூறுகின்றனர். நடிகைகள் சோலோவாக நடித்தாலும் படங்கள் ஓடுவதில்லை என்பதால் இந்த 4 பேரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக பேச்சுக்கள் புகைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











