நீங்க பழைய மாவு போல புளித்து போய்விட்டீர்கள்.. டாப் நடிகையை கழட்டி விடும் தயாரிப்பாளர்கள்!

By Staff

சென்னை: புதிய வரவுகளால் பெயரிலேயே உச்சத்தை தொட்ட அந்த டாப் நடிகையை தயாரிப்பாளர்கள் தற்போது கண்டுகொள்வதே இல்லையாம்.

ஆரம்பத்தில் நன்றாக நடிக்கிறார் என அந்த நடிகை பல படங்களில் புக் ஆகி வந்த நிலையில், திடீரென அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

மேலும், தென்னிந்தியாவில் இருந்து புதிய நடிகைகள் வட இந்திய படங்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது தான் உண்மையான காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சொதப்பும் படங்கள்

சொதப்பும் படங்கள்

பழைய வட இந்திய நடிகைகளின் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வந்த அந்த டாப் நடிகையின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்து சொதப்பி வருகின்றன. இதன் காரணமாக அவரது மார்க்கெட் ஒரேயடியாக அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

வயசான லுக்

வயசான லுக்

அதுமட்டுமின்றி நடிப்புக்காக மெனக்கெட்டு அவர் செய்த சில செயல்களால் அவரது தோற்றம் முற்றிலுமாக வயதானவரை போல மாறிவிட்டதாகவும், அதனால் தான் அவர் நடிக்கும் படங்களை பார்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

புதிய வரவு

புதிய வரவு

நம்பர் நடிகை மற்றும் சமத்து நடிகை என தென்னிந்தியாவில் இருந்து ஏகப்பட்ட புதிய திறமையான நடிகைகளின் வரவு காரணமாக அந்த நடிகை பக்கம் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தற்போது திரும்பி பார்ப்பதே கிடையாதாம். இதனால், கையில் இருக்கும் சில படங்களை தவிர்த்து புதிதாக எந்தவொரு படமும் அந்த நடிகைக்கு புக் ஆகவில்லையாம்.

புளித்த மாவு

புளித்த மாவு

தன்னை வைத்து ஏற்கனவே ஹிட் அடித்த சில தயாரிப்பாளர்களை அந்த நடிகை அணுக முயன்ற நிலையில், அந்த தயாரிப்பாளர்கள் நேரிலோ அல்லது போனிலோ பேசவே மறுத்து வருகின்றார்களாம். மேலும், அந்த தயாரிப்பாளர்கள் அந்த நடிகை புளித்த மாவாக மாறிவிட்டார் என்றும் கூறியதாக வெளியான பேச்சுக்களால் நடிகை கடும் கோபமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

நடிகைகளை ஓரங்கட்டும் நிலையில், தாங்களே சொந்த தயாரிப்பில் இறங்குவது வழக்கம். அதே போல தற்போது அந்த நடிகையும் சொந்த தயாரிப்பை ஆரம்பித்து படம் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிலும் நஷ்டம் ஏற்பட்டால் தப்பிக்கவே முடியாது என்பதால் பொறுமையாக நல்ல கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X