இனிமேல் அந்த பொண்ணு வேண்டாம்ப்பா.. பிளாக் லிஸ்ட் செய்த தயாரிப்பாளர்கள்.. இப்படி ஆகிடுச்சே?

By Staff

சென்னை: நாம கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு நமக்கு பாராட்டுக்கள் குவியப் போகுதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்த அந்த இளம் நடிகை தற்போது வீட்டுக்குள் ஓரமாய் உட்கார்ந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

அப்பவே அந்த இயக்குநரின் ஆசை வலையில் விழ வேண்டாம் என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் பேச்சைக் கேட்காமல் தன் இஷ்டத்துக்கு நடிகை நடந்தது தற்போது அவருக்கே பேக் ஃபயர் ஆகிவிட்டதாம்.

பாராட்டுக்களை பெற வேண்டிய நிலையில், வாய்க் கொடுத்து விபரீதத்தில் சிக்கிய அந்த நடிகையை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்ட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிர்வாணமாக நடிக்கக் கூடாது

நிர்வாணமாக நடிக்கக் கூடாது

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சில விஷயங்களை ரொம்பவே கடை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கலாச்சாரம், மதம் சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இன்னமும் ஒவ்வொரு படத்துக்கும் பூஜைப் போட்டுத் தான் ஆரம்பிக்கின்றனர். அப்படி இருக்க சில நடிகைகள் எல்லை மீறி நிர்வாணமாக நடித்தால், அவர்களை உடனடியாக ஓரங்கட்டி முத்திரை குத்தி விடுகின்றனர் என கோலிவுட் வட்டாரத்தில் ஏகப்பட்ட சம்பவங்களை குறிப்பிட்டு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வாயால் வந்த வினை

வாயால் வந்த வினை

எளிமையான மனிதர்களை ஏளனமாக நினைக்கும் புத்தி, அவர்களை உதாசினப்படுத்தி பேசும் பேச்சுக்களால் சில நடிகைகள் பெரிய சிக்கலில் சிக்கி உள்ளனர். சில சூப்பர் மாடல்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டிருக்கிறோம். இந்நிலையில், தவளை தன் வாயால் கெடும் என்பது போல நடிகை பேசியதற்கு எதிராக வழக்குகள் தொடரப்போவதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு முடிவுக்கே வந்து விட்டார்களாம்.

பிளாக் லிஸ்ட்

பிளாக் லிஸ்ட்

ஏற்கனவே சில நடிகைகளை மறைமுகமாக கோலிவுட்டில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள். தற்போது அந்த பட்டியலில் இந்த இளம் நடிகையின் பெயரும் மாட்டிக் கொண்டதாம். அந்த நடிகையை இனிமேலும், தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்து பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம், வளரும் போதே, இவ்வளவு ஆணவம் இருக்கும் இவரை பிளாக் லிஸ்ட்டில் போட்டால் தான் சரியாக இருக்கும் என ஒரே போடாக போட்டு விட்டதாக பரபரப்பு தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

நடிகைக்கு சப்போர்ட்

நடிகைக்கு சப்போர்ட்

நடிகையை அப்படி நடிக்க வைத்த அந்த பிரபலம் இன்னமும் அவருக்காக பலருடன் பேசி வருகிறாராம். இந்த விவகாரத்தில் அவர் மீது எந்த தவறும் இல்லை. தெரியாமல் பேசி விட்டார். வளர வேண்டிய பொண்ணு, நல்லா நடிக்கிறா, இப்படி அவளை ஒதுக்கி வைத்து விட வேண்டாம் என பேசி வருகிறாராம். அனைவரும் ஒதுக்கித் தள்ளினாலும், தொடர்ந்து தனது படங்களில் அவருக்கு வாய்ப்பு தருவேன் என்றும் கூறியிருக்கிறாராம்.

நடிகை அப்செட்

நடிகை அப்செட்

சினிமா உலகில் இப்படியொரு சர்ச்சையில் தான் இவ்வளவு சீக்கிரத்தில் சிக்குவேன் என அந்த நடிகை எதிர்பார்க்காத நிலையில், அவருக்கு எல்லாமே ஷாக்கிங் அனுபவமாக மாறி இருக்கிறது. பெற்றோர்களும், நடிகையை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறாராம். அதே நேரத்தில் நடிகைக்கு சில வெப்சீரிஸ்களில் இருந்து போல்டான கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X