For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் வளரவே இல்ல, அதற்குள் இந்த ஆட்டமா?: நடிகையை விளாசும் தயாரிப்பாளர்கள்

By Siva
|

சென்னை: இளம் நடிகை ஒருவர் வளரத் துவங்கிய வேகத்தில் அதிக சம்பளம் கேட்டு இயக்குநர்களை அதிர வைக்கிறாராம்.

அண்டை மாநிலத்தை சேர்ந்தவர் அந்த இளம் நடிகை. அவர் தனது தாய் மொழியில் நடிக்கத் துவங்கினார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகம் பக்கம் போனவருக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளது.

புதுப்படம்

புதுப்படம்

புதிய படத்தில் தனக்கு பெரிய பிரேக் கிடைத்த படத்தின் ஹீரோவுடன் மீண்டும் நடிக்க அம்மணி இரண்டு மடங்கு சம்பளம் கேட்டாராம். (அந்த ஹிட் படத்தை அடுத்து அவரை விட ஹீரோ தான் பயங்கரமாக பிரபலமானார்.) அவர் கேட்ட சம்பளத்தால் இயக்குநரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சி அடைந்தார்களாம். அம்மாயி, நீங்க இன்னும் வளரவே இல்லை அதற்குள் ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளீர்களே என்று டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

 வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

தெலுங்கு திரையுலகம் சென்ற நடிகையை நம் ஆட்கள் பார்த்துவிட்டு வாரிசு நடிகருக்கு ஜோடியாக்கியுள்ளனர். கோலிவுட்காரர்கள் அணுகியபோதும் அம்மணி பெரும்தொகையை சம்பளமாக கேட்டாராம். அம்மணி அதிவேகத்தில் வளர்ந்து வருவதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு சம்பளத்தை பேசி அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பேராசை

பேராசை

நடிகை 3வது படத்திற்கே தனது சம்பளத்தை அதுவும் 50 சதவீதம் உயர்த்தியது தெலுங்கு திரையுலகினருக்கு பிடிக்கவில்லை. நடிகை பேராசைப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கிடையே அவர் தனது தாய் மொழி படங்களுக்கும் கூடுதலாக காசு, பணம் துட்டு மணி மணி கேட்கிறாராம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இது காற்று அடிப்பதற்கு முன்பே தூற்றுவதாக உள்ளதே என்று தயாரிப்பாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இப்படியே நடிகை சம்பளத்தை உயர்த்தினால் அது அவரின் கெரியருக்கு நல்லது அல்ல என்கிறார்கள் பெரிய தயாரிப்பாளர்கள். இதற்கிடையே நடிகை தன்னுடைய படுகவர்ச்சி புகைப்படங்களை வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதை பார்த்து அவரின் ரசிகர்களே கேவலமாக திட்டிவிட்டனர். மேலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்திற்காகவும் அவரை ரசிகர்கள் அடிக்கடி விளாசுகிறார்கள்.

English summary
Directors and producers are unhappy with an actress after she has increased her remuneration.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more