ஹாட்ரிக் தோல்வி.. வெறுப்பேற்றும் வெரைட்டி நடிகர்.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்கள்!

By Staff

சென்னை: வெரைட்டி நடிகர் நல்லா நடிப்பார் அவரை வைத்து படம் எடுத்தால் வசூல் வேட்டை நடத்தலாம் என எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக தலையில் துண்டு போட்டு வருவதால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்களாம்.

பிரஸ் மீட் எல்லாம் வைத்து வெரைட்டி நடிகரை சமீபத்தில் பலரும் புகழ்ந்து தள்ளிய நிலையில், அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான அத்தனை படங்களும் ஆல் அவுட் ஆன நிலையில் திட்ட தொடங்கி உள்ளனர்.

மினிமம் கியாரண்டி வெற்றிக் கூட தர முடியாத நிலைக்கு வெரைட்டி நடிகர் சென்று விட்டாரே என அவரை நம்பியவர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்களாம்.

அகல கால்

அகல கால்

ஒரு நேரத்தில் உருப்படியாய் ஒரு விஷயத்தை செய்யும் நடிகர்களுக்கே வெற்றி கிடைக்க காலம் எடுக்கும் நிலையில், இவர் மட்டும் இப்படி அகல கால் வைத்து வருகிறாரே என கோடம்பாக்கத்தில் பலரும் வெரைட்டி நடிகர் மீது பயங்கர கடுப்பில் உள்ளார்களாம்.

தொடர் ரிலீஸ்

தொடர் ரிலீஸ்

வெரைட்டி நடிகர் நடிப்பில் சமீபத்தில் பல படங்கள் தொடர்ந்து வெளியான நிலையில், அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் சந்தோஷம் அடைந்தாலும், ஒவ்வொரு படத்தையும் பார்த்து முடித்த பிறகு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ரியாக்‌ஷனே மாறி விட்டதாம்.

எதுவும் கை கொடுக்கவில்லை

எதுவும் கை கொடுக்கவில்லை

ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்திருந்தாலும் வெரைட்டி நடிகர் சேஃப் ஆகியிருப்பார். ஆனால், வெளியான அத்தனை படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு பெரிய நாமத்தை போட பெரும் சிக்கலில் சிக்கி உள்ளாராம் வெரைட்டி நடிகர். இவரை நம்பி இனி புதிய படங்களை எப்படி ஒப்படைப்பது என்றே சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யோசித்து இளம் நடிகர்களை தேடி ஓடவும் தொடங்கி உள்ளனர்.

நெகட்டிவ் ரோல் தான்

நெகட்டிவ் ரோல் தான்

ஹீரோ கதாபாத்திரத்திற்கு வெரைட்டி நடிகர் சரியாக வரமாட்டார் என்றும் வழக்கம் போல நெகட்டிவ் கதாபாத்திரங்களிலேயே இனி அவர் நடிக்க வேண்டியது தான் என்கிற பேச்சுக்களும் அடிபட தொடங்கி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

போலி விளம்பரம்

போலி விளம்பரம்

மேலும், முழு படத்திலும் அந்த ஹீரோவே நடிப்பது போல போலி விளம்பரங்கள் செய்யப்பட்டு ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் வெரைட்டி நடிகர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பளம் எவ்வளவு என்பதை மட்டுமே இப்போதெல்லாம் அவர் கேட்பதாகவும் கதை பற்றி கவலைப்படுவது இல்லை என்றும் கூறுகின்றனர்.

எல்லாம் மாறும்

எல்லாம் மாறும்

ஆனால், வெரைட்டி நடிகர் இதை பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லையாம். படம் சரியாக ஓடாததற்கு தான் மட்டும் காரணம் இல்லை என்றும் இயக்குநர்கள் மீது குறை வச்சிக்கிட்டு என்னை ஏன் சொல்றாங்க என நண்பர்களிடம் மனம் திறந்து பேசி வருகிறாராம். மேலும், தனது குருநாதர் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படம் வெளியானால் எல்லாமே மாறி விடும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X