குரல்ல அசத்தறாரு...ஆனா, ரேட்டுல மிரட்டுறாரே... அந்த ஃபேவரைட் சிங்கர் பற்றி அப்படி சொல்றாங்களே..?

By

சென்னை: அந்த மோஸ்ட் வான்டட் பாடகர் பற்றி, அப்படி பேசுகிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

அவர் பாடினால் பாடல் ஹிட் என்று நம்பும் டைரக்டர்கள், அவரை தங்கள் படத்தில் ஒரு பாடலையாவது பாட வைக்க நினைக்கின்றனர்.

மியூசிக் டைரக்டர்களின் ஃபேவரைட்டாகவும் இருக்கிறார், அந்த பாடகர். ஏனென்றால் அவர் குரலில் பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்ற நம்பிக்கைத்தான்.

நிற்க நேரமில்லை

நிற்க நேரமில்லை

அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அந்தப் பாடகரின் பிசினஸ் விவகாரங்களை கவனித்துக் கொள்பவர் அவரது தந்தைதானாம். தமிழ், தெலுங்கில் படு பிசியாக இருக்கும் அந்த பாடகருக்கு நிற்கக் கூட நேரமில்லை என்கிறார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால், பண மழை. ஒரே மாதிரி ஸ்டைல்ல பாடுறாரே என்ற குறையும் அவர் மீது இருக்கிறது.

சம்பளம்

சம்பளம்

இருந்தாலும் தொடர்கிறது, வாய்ப்புகள். முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து சின்ன படங்கள் வரை ஒரு பாடலையாவது அவரை பாட வைத்து விடுகிறார்கள். இப்போது அவர் கேட்கும் சம்பளம்தான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய ஹீரோ படங்களுக்கு அவர் கேட்டதை கொடுக்கலாம், சின்ன படங்களுக்கு அப்படி கொடுக்க முடியுமா? என்கிறார்கள்.

இவ்வளவு வேண்டும்

இவ்வளவு வேண்டும்

வழக்கமாக ஒரு பாடகருக்கு ஒரு பாடல் பாட, முப்பதாயிரம் ரூபாயில் இருந்து கொடுப்பது வழக்கம். சில பெரிய பாடகர்களுக்கு ஒன்று ஒன்றரை லட்சம் வரை கொடுப்பார்கள். இதுதான் நடைமுறை. சில பாடகர்கள் இவ்வளவு வேண்டும் என்றும் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட பாடகர்களுக்கு கவுரவமான தொகையை தயாரிப்பாளர்கள் கொடுப்பதும் வழக்கம்.

பல மடங்கு

பல மடங்கு

இந்நிலையில், இந்த பாடகர் கேட்கும் தொகை மற்றவர்கள் கேட்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறதாம். அதாவது ஒரு பாடலுக்கு, ஐந்து லட்சம் வரை கேட்கிறாராம். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்றாலோ, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே என்றாலோ, முடியாது என்பதுதான் பதிலாக வருகிறதாம் அவரிடமிருந்து. இதை பெருங்குறையாக சொல்கிறார்கள், சில சினிமா மானேஜர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X