சகவாசமே வேண்டாம்னு விலகிய மாஸ் ஹீரோ.. மீண்டும் மடக்கிய அந்த பெரிய நிறுவனம்.. எப்படி தெரியுமா?
சென்னை: மீண்டும் மாஸ் நடிகருடன் புதிய ஒப்பந்தங்களை அந்த பெரிய நிறுவனம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே அந்த நிறுவனம் தயாரிப்பில் மாஸ் நடிகர் நடித்த படத்துக்கு எந்தவொரு புரமோஷனும் பண்ணாமல் விட்ட நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனால் கடுப்பான நடிகர் இனிமேல் அவர்களுடன் பணியாற்ற மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், ரகசிய பஞ்சாயத்து ஒன்றை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டம்மி பண்ணிட்டாங்க
மாஸ் நடிகர் தேவையில்லாமல் அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் படம் பண்ண நிலையில், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை டம்மி செய்து விட்டனர் என்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அந்த பெரிய திருவிழாவையே நடத்த விடாமல் செய்து ஏமாற்றியதால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி நடிகருக்கும் மிகப்பெரிய அளவில் கோபம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இனிமே கிடையாது
இதற்குமேல் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்கிற முடிவுக்கே மாஸ் நடிகர் வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன. தயாரிப்பு நிறுவனத்தின் மீது பயங்கர கடுப்பில் இருந்த நிலையில், அப்படியொரு முடிவை நடிகர் எடுத்து விட்டார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்நிலையில், பிற தயாரிப்பாளர்களுடன் இணைந்து படம் பண்ணவும் நடிகர் ஆரம்பித்து விட்டார்.

மீண்டும் கூட்டணி
இந்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசியத் தொடங்கி இருக்கின்றன. திடீரென நடிகரின் மன மாற்றத்துக்கு காரணம் என்ன? என்கிற கேள்விகளும் ரகசியமாக நடந்த பஞ்சாயத்து குறித்த பேச்சுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக கசியத் தொடங்கி உள்ளன.

அந்த டீலிங்
தோல்வி படம் கொடுத்த இயக்குநரே அந்த தயாரிப்பில் மீண்டும் படம் பண்ணி வரும் நிலையில், நடிகரை கன்வின்ஸ் செய்வது பெரிய விஷயமாகவே தெரியவில்லையாம். உச்ச நட்சத்திரத்துக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுத்து வரும் நிலையில், அதே அளவு சம்பளத்தை கொடுக்க முன் வருவதாக டீலிங் பேசிய நிலையில், நடிகரும் சில இன்சல்ட்களை கண்டுக்காமல் விட்டு விட்டு மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டி இருப்பதாக கூறுகின்றனர்.

அந்த கண்டிஷன்
மேலும், இந்த முறை அந்த திருவிழா பெரிய திருவிழாவாக நடக்கணும் என்கிற கண்டிஷன் மற்றும் புரமோஷன் பான் இந்தியா அளவில் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன்களை நடிகர் தரப்பு சொல்ல சொல்ல, அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்டு டீலை ஓகே செய்து இருக்கிறதாம் அந்த பெரிய நிறுவனம். தங்க முட்டை போடுற வாத்தை வயித்த அறுக்க முடியுமா!


Click it and Unblock the Notifications











