இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்க.. உச்ச நடிகரிடம் கெஞ்சிய தயாரிப்பாளர்.. வீட்ல வேற பிரஷர்?
சென்னை: உச்ச நடிகர் கால்ஷீட் பெறுவதற்காக அவருடைய மூத்த மகளுக்கு பட வாய்ப்பை பிளான் பண்ணி தான் அந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்ததாக கூறுகின்றனர். பிரைட் நிறுவனம் உச்ச நடிகரை வைத்து பல கோடி ரூபாய் பிசினஸ் பார்த்த நிலையில், நாமும் சூட்டோட சூடாக வசூலை வாரி குவிக்க வேண்டும் என கணக்கு போட்டிருக்கிறது அந்த நிறுவனம்.
ஆனால், அத்தனைக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக நடிகரின் மகள் பார்த்த வேலை தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டதாம். பெரிய வசூல் வரவில்லை என்றாலும், போட்ட பட்ஜெட்டுக்காவது வசூலை உச்ச நடிகரின் பிரசன்ஸ் பெற்றுத் தந்து விடும் என நினைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட நிலையில், அதற்கு ஆப்பு அடித்தது போல வசூல் நிலவரம் இருப்பதை பார்த்து அப்செட் ஆகி விட்டாராம்.

புகழை கெடுக்கும் மகள்கள்: நடிகரின் அளவுக்கு அவரது மகள்கள் யாருமே பெரிதாக ஷைன் ஆகவில்லை. திரை வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் இருவரும் பல பிரச்சனைகளை சந்தித்து அப்பாவையும் கஷ்டப்படுத்தி வந்த நிலையில், தற்போது மேலும், அப்பாவின் புகழை ஒரேயடியாக கெடுத்து வருவதாக நடிகரின் ரசிகர்களே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
யாருமே விரும்பல: நடிகரின் படமாக இருந்திருந்தால் இந்நேரம் பெரிய படையே கிளம்பிப் போயிருக்கும் என்றும் அவரது மகள் நடிகரை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டதை அறிந்த நிலையில், அந்த நடிகரின் ஹார்ட்கோர் ரசிகர்களே பெரிதாக விரும்பாமல் படத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
சரிந்த பிசினஸ்: இப்படியாகும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிகளவுக்கு பிசினஸ் சரிந்து விட்டதாம். அதைவிட நடிகரை வைத்து அடுத்து உருவாக்கி வரும் படத்திற்கும் இதன் மூலம் விநியோகஸ்தர்கள் பின் வாங்கவும் விலையை குறைத்து பேசவும் முடிவு செய்தது தயாரிப்பு நிறுவனத்துக்கு தலைவலியை கொடுத்து விட்டதாக கூறுகின்றனர்.
கெஞ்சிய தயாரிப்பாளர்: இந்நிலையில், அடுத்து இன்னொரு மகளுடைய படத்தில் நடிக்கப் போகிறேன் என்கிற அறிவிப்பை மட்டும் இப்போதைக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பும் வந்து விட்டால் மேலும், தங்களுக்கு வியாபார ரீதியில் சிக்கல் உருவாகும் இந்த ஒரு உதவியை மட்டும் செய்யுங்க என உச்ச நடிகரிடம் தயாரிப்பு தரப்பு கோரிக்கை வைத்ததும் நடிகர் சிரித்து விட்டாராம். வீட்டில் ஒரு பக்கம் நடிகருக்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு கோரிக்கை வந்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











