பிசினஸில் தலையிடும் நம்பர் நடிகை.. பிளான் பண்ணி கவிழ்க்க பார்க்கும் தயாரிப்பு நிறுவனம்.. ஏன்?
சென்னை: நடிப்பை தாண்டி ஏகப்பட்ட பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த நம்பர் நடிகை. ஆனால், இது சிலருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்கின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார் நம்பர் நடிகை. சமீப காலமாக அவரை பற்றிய தேவையில்லாத வதந்திகள் அதிக அளவு பரவி வருகின்றன.
இதற்கெல்லாம் காரணம் அந்த தயாரிப்பு நிறுவனம் தான் என புதிய புகைச்சல் ஒன்று கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளன.

முதலிடம்
நம்பர் நடிகை சினிமாவில் டாப் நடிகையாக எப்போதுமே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் கதையின் நாயகியாகவும் தனது நடிப்பின் மூலம் தனது இடத்தையும் மார்க்கெட்டையும் கொஞ்சம் கூட இறங்கவிடாமல் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

பிசினஸில் ஆர்வம்
நடிப்பை தாண்டி சமீப காலமாக நம்பர் நடிகை பிசினஸில் அதிகளவிலான ஈடுபாடு செலுத்தி வருகிறார். சினிமாவை சுற்றிய பிசினஸ் மற்றும் சினிமாவை தாண்டிய பிசினஸ் என ஏகப்பட்ட விஷயங்களில் துணிந்து முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், அவரது இந்த் செயல் சிலருக்கு பெரிய பிரச்சனை உண்டாக்கி வருகிறதாம்.

தொடர்ந்து தொல்லை
ஆனால், இது சிலருக்கு பிடிக்காத நிலையில், நம்பர் நடிகைக்கு தொடர்ந்து தொல்லைகளை கொடுக்கும் நோக்கில் ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்களாம். திடீரென தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு, நடிகை பற்றிய அவதூறு செய்திகள் என அடிக்கடி கிளம்ப காரணமே அந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தான் என்கின்றனர்.

வாய்ப்பை தட்டிப் பறித்து
ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு வரவேண்டிய வாய்ப்பு ஒன்றை நடிகை பக்கா பிளான் போட்டு தன் பக்கம் திருப்பிக் கொண்டது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர். மேலும், நடிகையின் படங்களை ஓடவிடாமல் பண்ணவும், அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை கெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஒரு முடிவோடு
இந்த விவகாரம் நம்பர் நடிகைக்கும் அரசல் புரசலாக தெரிய வர எந்தவொரு பதற்றமும் இல்லாமல், தொழில் போட்டி காரணமாகத்தானே இதெல்லாம் பண்றாங்க.. பண்ணட்டும் பார்த்துக் கொள்ளலாம் என ஒரு முடிவோடு தொடர்ந்து தனது வேலைகளை பார்த்து வருகிறாராம் நம்பர் நடிகை.


Click it and Unblock the Notifications











