என்ன சொல்றீங்க.. உச்ச நடிகருக்கே இப்படியொரு நிலைமையா? இயக்குநருக்கு வலைவீசும் தயாரிப்பு தரப்பு!
சென்னை: உச்ச நடிகரை வைத்து வாழ்நாளில் ஒரு படமாவது எடுத்து விட முடியாத என இயக்குநர்கள் ஏங்கிய காலம் எல்லாம் போய் அய்யோ வேண்டாம் என இயக்குநர்கள் தெறித்து ஓடும் நிலைமை ஆகிடுச்சே என கோடம்பாக்கத்தில் பெரும் புலம்பல் அலை வீசி வருகிறது.
ஏற்கனவே முதலுக்கே மோசம் வரும் அளவுக்கு தொடர்ந்து தன்னை வைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வரும் உச்ச நடிகரை வைத்து நாமும் படம் எடுத்து பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என இளம் இயக்குநர்கள் ஓடி ஒளிந்து கொள்வதாக கூறப்படுகிறது.

கதை இல்லை
சில இயக்குநர்கள் தற்போதைக்கு தங்களிடம் உச்ச நட்சத்திரத்தை இயக்கும் அளவுக்கான கதை இல்லை என்றே சொல்லி தயாரிப்பு தரப்பின் கோரிக்கையை மறுத்து வருவதாக கூறப்படுகிறது. ஹிட் கொடுத்தாக வேண்டிய சூழல் இருப்பதால் நல்ல இயக்குநர்களை தயாரிப்பு தரப்பு நாடி வருகிறது.

ப்ளீஸ் விட்ருங்க
சமீபத்தில் மிகப்பெரிய ஹிட்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர்களிடமும் அந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால், ப்ளீஸ் விட்ருங்க நாங்க இப்போதைக்கு அதில் கவனம் செலுத்த முடியாது என்றே இளம் இயக்குநர்கள் நோ சொன்னது கோடம்பாக்கத்துக்கே பூகம்பம் வந்தது போல ஆகிவிட்டதாம்.

லாபத்தை ஈட்ட
சமீபத்தில் உச்ச நடிகரை நம்பி தயாரித்த படம் ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை தந்தாலும் படத்தில் ஒன்றுமே இல்லை என்கிற விமர்சனங்களால் போக போக வசூல் டல்லடித்து முதலுக்கே மோசம் ஏற்பட வைத்து விட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த நடிகரை வைத்து லாபத்தை ஈட்ட அதே தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

சம்பளம் குறைப்பு
இந்த முறை நடிகரின் சம்பளத்தில் மிகப்பெரிய அளவில் தயாரிப்பு தரப்பு கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குறைவான பட்ஜெட்டில் நல்ல படத்தை இயக்கி ஹிட் கொடுப்பேன் என எந்தவொரு இயக்குநர் உறுதி அளிக்கிறாரோ அவருக்கே வாய்ப்பு என்கிற அறிவிப்பால் உச்ச நடிகரின் படத்தை இயக்க முன் வந்த ஒரு சில இயக்குநர்களும் பின் வாங்கி விட்டார்களாம்.

இயக்குநர் வேட்டை
ஏற்கனவே தங்கள் தயாரிப்பில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் ஒவ்வொரு இயக்குநரிடமும் உச்ச நட்சத்திரத்தின் படத்தை நீங்க பண்றீங்களா என தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவது எல்லாம் காலக் கொடுமை. கடைசியாக பிரகாச நடிகரின் படத்தை இயக்கி வரும் அந்த இயக்குநரிடம் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











