இந்த படத்துக்கு அந்த ஹீரோ தேவையா? அடிமடியிலே கையை வைத்த தயாரிப்பு நிறுவனம்.. என்ன ஆகப் போகுதோ?
சென்னை: சுத்தமாக மார்க்கெட்டே இல்லாத அந்த ஹீரோவை வைத்துக் கொண்டு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என பளிச்சென தயாரிப்பு நிறுவனம் இயக்குநரிடம் கேட்க அவரே ஆடிப் போய்விட்டாராம்.
கணவரை பிரிந்ததே மீண்டும் பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அவர் இதுவரை இயக்கிய எந்த படமும் ஓடவில்லை என்றாலும், இந்த முறை ஒரு பெரிய பிளஸ் இருப்பதால் அந்த பிரபல நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது.
கதை எல்லாம் ஓகே என சொன்ன அந்த தயாரிப்பு நிறுவனம் ஹீரோவை மாற்ற முடியுமா? என்கிற கோரிக்கையை வைத்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகரின் வாரிசு
நல்ல மனிதர் என்றும் நல்ல நடிகர் என்றும் பெயரெடுத்து மறைந்த அந்த பிரபல நடிகரின் வாரிசு தானும் தந்தையை போல ஹீரோ ஆக வேண்டும் என சினிமாவில் களமிறங்கினார். ஆனால், எவ்வளவு தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் இப்போ வரைக்கும் ஒரு பெரிய வெற்றியை கூட அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை.

எல்லாமே சொதப்பல்
பெரிய பெரிய இயக்குநர்களையே இவர் ஹீரோவாக நடித்து காலி செய்த வரலாறுகளும் நிறையவே உள்ளன. இவரை கண்டாலே, அய்யோ அந்த நடிகரா என பலரும் தெறித்து ஓடி விடுவார்கள். அப்படியிருக்க தலைகீழாகத்தான் குதிப்பேன் என அந்த இயக்குநர் இவரை வைத்து புதிய படத்தை இயக்க முன் வந்துள்ளார்.

இயக்குநர் பிடிவாதம்
ஏற்கனவே இளம் வாரிசு ஹீரோ ஒருவரை வைத்து இவர் எடுத்த அந்த சூதாட்ட திரைப்படம் சின்னாபின்னமானது. கேமியோ எல்லாம் போட்டும் கொஞ்சம் கூட படம் எடுபடவே இல்லை. அதற்கு முன்னதாக இவர் எடுத்த காதல் சைக்கோ படமும் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், இந்த முறையும் இளம் வாரிசு நடிகரை வைத்துத் தான் படம் எடுப்பேன் என பிடிவாதம் பிடித்து வருகிறார்.

அப்பாவுக்கு டார்ச்சர்
இந்த முறை கணவரை பிரிந்து விட்ட நிலையில், அவரை கேமியோவாக அழைக்க முடியாது என்பதால், அப்பாவை போட்டு படாத பாடு படுத்தி எடுத்து வருவதாக கூறுகின்றனர். இவரது தொல்லை தாங்கமுடியாமல், ஓகேன்னு அவரும் சொல்லி விட்டாராம். அவரது கேமியோவை வைத்துத் தான் அந்த தயாரிப்பு நிறுவனமே இந்த இயக்குநரை நம்பி படம் தயாரிக்க முன் வந்திருக்கிறது. ஒன்றில் விட்டால் அடுத்த இரண்டில் பிடித்து விடலாம் என்கிற எண்ணம் தான்.

ஹீரோவை மாத்தலாமா
ஆனாலும், தயாரிப்பு நிறுவனம் தற்போது தொடர்ந்து வெற்றி முகத்தை அடைந்து வரும் நிலையில், ஏன் தேவையில்லாமல் ஒரு தோல்வி படத்தை கொடுக்க வேண்டும். கொஞ்சம் மார்க்கெட் உள்ள ஹீரோவை போட்டு எடுத்தாலாவது பிசினஸ் பாசிட்டிவாக இருக்குமே என இயக்குநரிடமே நேரடியாக உங்க கதைக்கு இந்த ஹீரோ தான் வேணுமா? அல்லது வேறு நபரை பார்க்கலாமா என்றே கேட்டு விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் முடிவு என்ன
இந்த விவகாரத்தில் நடிகருக்கு ஆதரவாக இயக்குநர் செயல்படுவாரா? அல்லது காசு கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்வாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. விரைவில் இதுதொடர்பான முடிவை இயக்குநர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவு எடுத்து விட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விடுமாம்.


Click it and Unblock the Notifications











