மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?

By Staff

சென்னை: வாரிசு நடிகையை நம்பி அவரது பின்னால் போன நிலையில், இயக்குநரின் பெயர் மொத்தமாக கெட்டுப் போய் விட்டதாம். நடிகையுடன் இணைத்து வைத்து பலரும் பேசத் தொடங்கிய நிலையில், சினிமா பிரபலங்களே என்ன நடக்குது என இயக்குநரை நேரடியாகவே கேட்க ஆரம்பித்ததும் மனுஷன் சுதாரித்துக் கொண்டதாக கூறுகின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து திடீரென வந்த அழுத்தம் காரணமாகத்தான் அதிரடியாக அடுத்த படத்தின் பக்கம் தனது கவனத்தையே அந்த இயக்குநர் திருப்பி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Production side gives severe warning to Romantic Director

இயக்குநருக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வந்த வார்னிங்கால் மனுஷன் ரொம்பவே ஆடிப் போய்விட்டார் என்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல கோடி முதலீடு: அந்த இயக்குநரை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு போட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் இயக்குநரின் பெயர் டோட்டலாக டேமேஜ் ஆகி வருவதால் ரொம்பவே அப்செட் ஆகி விட்டதாம். அடுத்து நம் படத்தின் பணிகளை செய்யாமல் தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கையில் இயக்குநர் ரொம்பவே ஈடுபட்டு வருகிறாரே என்று புகார்கள் வந்த நிலையில், இயக்குநரை நேரடியாகவே அழைத்து தயாரிப்பு நிறுவனம் வார்னிங் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

வாரிசு நடிகையால் வந்த வினை: வாரிசு நடிகை இயக்குநரை தொடர்ந்து சுற்றி வரும் நிலையில், அவருக்காக அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும் தலையாட்டி பொம்மையாகவே திடீரென இயக்குநர் மாறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இயக்குநர் ரூட் மாறி போகிறாரே என சினிமா துறையினரே பேச ஆரம்பித்த நிலையில், இயக்குநர் சுதாரித்துக் கொள்ள தயாரிப்பு நிறுவனம் சூப்பரான விஷயத்தை செய்து விட்டதாக கூறுகின்றனர்.

எச்சரிக்கையும் நல்லதுதான்: அடுத்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் மோசம் செய்து விடக் கூடாது என வார்னிங் கொடுத்த நிலையில், அதிரடியாக அடுத்த படத்தின் ஆரம்ப வேலைகளை இயக்குநர் தொடங்கி விட்டார் என்றும் தனது ஃபோகஸை முற்றிலுமாக வாரிசு நடிகையின் பக்கத்தில் இருந்து மாற்றிவிட்டார் என்றும் கூறுகின்றனர். மேலும், ஸ்டார் நடிகரை வைத்து அறிவிப்பு டீசர் ஒன்றுக்கான மேக்கிங் பணிகளையும் தொடங்கவிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X