ரகசிய காதல் அம்பலமானாலும்.. அமைதியோ அமைதின்னு நடிகை இருக்க காரணமே இதுதானா?.. அய்யோ பாவம்!
சென்னை: சினிமா பிரபலங்கள் தங்களது பிரேக்கப் மற்றும் விவாகரத்து அறிவிப்புகளை உடனடியாக சொல்லி அந்த பிரபலத்துடன் தங்களை சேர்த்துக்கூட பேசி விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால், அதே சமயம், காதலித்தால் அதை பேபி நடிகை போல கடைசியில் கல்யாணம் ஆகும் வரை ரகசியமாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.
வசூல் நடிகையும் தனது காதலை ரொம்பவே ரகசியமாக வைத்துக் கொண்டு வந்த நிலையில், நடிகர் கசிய விட்ட தகவல் மற்றும் க்ளூக்கள் மூலம் பூசணிக்காய் வெளியே வந்தாலும், அதை எப்படியாவது சோற்றை போட்டு மூடி மறைத்து விட வேண்டும் என நடிகை தொடர்ந்து அமைதி காத்து வருவதற்கு இப்படியொரு ஆபத்தான காரணம் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமாவில் தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், அது கெட்டு விடக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் அவர் செய்கிறாரா என்றால் அதுதான் கிடையாது என்று திடுக்கிட வைக்கின்றனர்.
அம்பலமானாலும் அமைதி: ஏற்கனவே வெளிப்படையாக திருமணத்தை அறிவித்து நிச்சயம் செய்த நிலையில், கடைசியாக திருமணம் நின்று போன நிலையில், நடிகை ரொம்பவே மனம் உடைந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த தருவாயில் தான் டோலிவுட் நடிகருடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் அவரது அழகால் மயங்கி அவரை காதலிக்கவும் ஆரம்பித்து விட்டாராம். நடிகரும் நடிகையை ரொம்பவே அன்புடன் பார்த்துக் கொண்டாலும், ரகசிய காதல் அம்பலமாக காரணமே காதலர் தான் என்கிற டவுட்டு நடிகை மனதில் ஓடிக்கொண்டே இருப்பதால் தான் இன்னமும் அமைதியாக உள்ளார் என்கின்றனர்.
நம்பிக்கை குறைவு: டோலிவுட் இளம் நடிகர்கள் எல்லாம் ஒன்றுக்கு 2 திருமணங்கள் செய்து வருகின்றனர் என்றும் உனக்காக எத்தனை வருடம் அவன் காத்திருக்கிறான் என்று பார்த்து அதற்கு பிறகு திருமண பந்தத்தில் இணையலாமா? வேண்டாமா? என்கிற முடிவை எடு என நடிகைக்கு ரொம்பவே வேண்டப்பட்ட உறவினர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தான் நடிகையின் காதல் லீலைகள் மொத்தமும் அம்பலமான பிறகும் அப்படியே அமைதி காத்து வருகிறார் என்றும் நடிகர் தனக்காக சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் தன்னை முழுவதுமாக சகித்துக் கொண்டால் தான் திருமணம் என்கிற முடிவில் இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











