»   »  பன்ச் நடிகரைப் புலம்பவிட்ட... வாரிசு நடிகை

பன்ச் நடிகரைப் புலம்பவிட்ட... வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் அந்த நடிகரின் படத்திற்கு நீண்ட நாட்களாக பெயர் வைக்காமல் இருந்தனர். கடைசியாக படம் முடியப்போகும் தருவாயில் படத்திற்கு பெயரை வைத்து ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்தனர்.

படத்தின் பெயர் நன்றாக இல்லை என்று சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கருத்துக்கள் எழுந்தாலும், நடிகர் நடிப்பதால் படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர்.

இந்நிலையில் இவரின் படத்தலைப்பு சத்தமே இல்லாமல் பன்ச் நடிகரின் படத்திற்கு ஆப்பு வைத்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்து இருக்கின்றன.

சமீபத்தில் பன்ச் நடிகரின் நடிப்பில் வெளியான அந்த இரண்டெழுத்துப் படத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையையே தனது படத்திற்கு வைத்து வில்லங்கத்தை உருவாக்கியிருக்கிறார் அமைதி நடிகர்.

எப்படி இந்த விஷயம் வெளியே கசிந்தது என்று படக்குழுவினர் விசாரணையில் இறங்கியபோது இரண்டு படத்திற்கும் இடையே இருக்கும் ஒரே நபர் வாரிசு நடிகைதான் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.

உண்மையை ஆராய்ந்த போது நடிகை தான் இந்தப் பெயரை வைக்கச் சொல்லி அடம்பிடித்தாராம். மேலும் பல தலைப்புகள் பரீசிலனையில் இருக்க இந்தப் பெயரை தேர்வு செய்யுங்கள், நான் ஏன் சொல்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியும் என்றும் கூறியிருக்கிறார்.

கடைசியில் பார்த்தால் பன்ச் நடிகரின் படம் முழுவதுமே அமைதி நடிகரின் தலைப்பு இடம்பிடித்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பன்ச் நடிகர் வாரிசு நடிகையின் மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

English summary
The Heir Actress has wedge without any Sound. Here Cote Actor's Crew Happy to there the same time Punch Actor Huff in There.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil