»   »  ஆசை யாரை விட்டது?.. மூன்றெழுத்துக்காரரும் "அதில்" முங்கப் போறாராம்!

ஆசை யாரை விட்டது?.. மூன்றெழுத்துக்காரரும் "அதில்" முங்கப் போறாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த மூன்றெழுத்து பஞ்ச் நடிகர் விரைவில் முழுநேர அரசிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்களைக் கண்டு கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்தாலும் கூட அரசியல் ஆசை அந்த நடிகரைப் பாடாய்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

Punch Actor next play Politics Movie

அந்த ஆசையை இதுநாள்வரை படங்களில் இலைமறைகாயாக வெளிப்படுத்திய நடிகர் தற்போது நேரடியாகவே வெளிப்படுத்தப் போகிறாராம்.

ஆமாம் போலீஸ் படத்தைத் தொடர்ந்து முழுநேர அரசியல் படத்திற்காக அந்த இளம் இயக்குநருடன் மீண்டும் நடிகர் கைகோர்க்கப் போவதாக கூறுகின்றனர்.

அதிலும் படத்தின் கதையை அந்தப் பிரமாண்ட இயக்குநரின் அரசியல் படம் போலவே அமைக்க சொல்லி அன்புக் கட்டளை வேறு போட்டிருக்கிறாராம்.

தொடர்ந்து நடிகரின் படங்கள் பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த நேரத்தில் அவர் இந்த மாதிரி ஒரு முடிவெடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பிரமாண்ட இயக்குநர் அரசியல் படத்தில் நடிக்க முதலில் பஞ்ச் நடிகரை அணுகி அவர் வேண்டாம் என்று மறுத்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

English summary
Reports says Punch Actor Again Team Up with Young Director, Act a Full Length Politics Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil