»   »  8 கோடி வேணும்... அடம் பிடித்த புயல் காமெடியனை சும்மா உட்கார வைத்த பிரம்மாண்டம்!

8 கோடி வேணும்... அடம் பிடித்த புயல் காமெடியனை சும்மா உட்கார வைத்த பிரம்மாண்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரசியல் பக்கம் போனதால் சினிமாவில் இருந்து ஒதுங்கி வனவாசம் போன காமெடி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக போகவில்லை. திரும்ப காமெடி பாதைக்கே திரும்பி விட்டார்.

இந்நிலையில்தான் புயல் நடிக்க, பிரம்மாண்ட இயக்குநர் தயாரிக்க, ஃபேண்டஸி இயக்குனர் இயக்கி பெரிய வெற்றி அடைந்த இம்சை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கத் திட்டமிட்டனர். இயக்குநர் ஸ்க்ரிப்டை எப்போதோ தயார் செய்துவிட்டார். பிரம்மாண்டமும் ஓகே சொல்லிவிட்டார்.

Puyal comedian's adamant for payment

ஆனால் புயலோ எட்டு கோடி கொடுத்தா தான் ஹீரோவாக நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். காமெடியனாக நடிக்க மட்டும் லட்சங்களில் சம்பளம் கேட்கும் புயல் இப்படி குண்டை தூக்கிப் போட்டதால் அவரே வருவாரு... வெயிட் பண்ணுங்க... என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டாராம் பிரம்மாண்டம்.

காமெடி பண்ணும் படங்களின் ஷூட்டிங் போக சும்மா இருக்கும் நேரங்களில் அலுவலகத்திலேயே விட்டத்தை பார்த்தபடி யோசிக்கிறாராம் புயல்.

சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க கைப்புள்ள!

English summary
Puyal comedian's adamant for payment.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil