இதுக்கு எதுக்கு நான்? இயக்குநரை ரிவிட் எடுத்த புயல்!
சமீபத்தில் ரிலீஸாகி சர்ச்சையான படத்தில் புயல் காமெடியனை ஊறுகாயை விட கம்மியாக பயன்படுத்தியிருந்தார்கள். இதில் அந்த காமெடியன் கடுப்பாகி விட்டாராம்.
தீபாவளியன்று வரை படம் பல்வேறு சிக்கல்களில் இருந்ததைக் காரணம் காட்டி யாருக்குமே படத்தைக் காட்டவில்லையாம். படத்தை பார்த்த புயலின் ரசிகர்கள் கோபமாகி அவரிடம் படத்தில் அவருடைய போர்ஷன்கள் குறைவாக இருப்பதை போட்டுக் கொடுக்க டென்ஷனாகி விட்டாராம் புயல்.
எடுத்தது எல்லாம் படத்தின் நீளம் கருதி வெட்டி எறியப்பட்டிருந்ததாம். அந்தக் களேபரத்திலும் இயக்குநருக்கு போனைப் போட்டு 'இதுக்கு எதுக்குய்யா நானு?' என்று கேட்டு வறுத்திருக்கிறார்.
இனிமேல் கால்ஷீட் கீல்ஷீட்னு கேட்டு என் ஆபிஸ் பக்கம் கால் வெச்சுடாதே... என்றும் சொல்லிவிட்டாராம்.
சில்லாக்கி டும்!
Comments


Click it and Unblock the Notifications