»   »  செக்ஸ்: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்!!

செக்ஸ்: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங்..டிங்..டிங் என்று முரளியுடன் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கலக்கல் ஆட்டம்போட்டாரே.., ஒரு நடிகை. நினைவில் இருக்கிறதா?

அவரது பெயர் ராதா. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த பின் கேம் என்ற டப்பா படம் கிடைத்தது. அதை விட்டால் பெரியஅளவில் வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போகவே தனது சொந்த ஊரான தெலுங்குக்குப் போனார்.

அங்கு நினைத்தபடி ஏதும் செட் ஆகவில்லை. இதையடுத்து கன்னடத்துக்கும் மலையாளத்துக்கும் போனார். அங்கு பலான படரேஞ்சில் சில படங்களில் நடித்தார்.

யாரோ ஒரு தயாரிப்பாளருடன் அவர் செட்டில் ஆகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவருக்கு குழந்தை இருப்பதாகவும்சொன்னார்கள். மேலும் மலையாளத்தில் பிட் படங்களில் ராதா நடிப்பதாகவும் கூறப்பட்டது.

பின்னர் சத்தத்தையே காணோம். ஆளே வெளியில் தட்டுப்படாமல் இருந்தவர் சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில்கொடுத்துள்ள பேட்டி கோலிவுட்டில் தீயைப் பற்ற வைத்துள்ளது. தன்னை தயாரிப்பாளர் ஒருவர் செக்சுக்கு அழைத்தார் என்றுநேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார் ராதா.

சான்ஸ் கேட்டு வரும் பெண்களை வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் பல தயாரிப்புப் பார்ட்டிகள் மேய்வது தெரிந்த கதைதான்.

சான்ஸ்சுக்காக சில அட்ஜஸ்ட்மென்ட்ஸ் என்ற பெயரில் நடிக்க வரும் பெண்களில் சிலர் விட்டுக் கொடுத்துப் போவதும்வழக்கமே. ஆனால், இதை எல்லா நடிகைகளும் தயாரிப்பாளர்களும் மறுப்பதும் வழக்கம்.

இந் நிலையில் ராதா கொடுத்துள்ள பேட்டியில், சினிமாவில் இவ்வளவு அசிங்கம் இருக்கும் என்று தெரியாமல் தான்சினிமாவுக்கு வந்தேன். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் என் பெயரை டைட்டிலில் போடாமல் விட்டுவிட்டார் தயாரிப்பாளர்தங்கராசு. அந்தப் படத்தில் நடித்ததற்கு சம்பளமாக ரூ. 50,000த்தை சண்டை போட்டுத் தான் வாங்கினேன்.

அத்தோடு தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்குக்குப் போனேன். அங்கு சில படங்களில் நடித்தேன். ஆனால், நான் காபரேநடிகை, ப்ளூ பிலிமில் கூட நடிக்கிறேன் என்று வதந்திகள் பரப்பினார்கள்.

இதனால் நொந்து போய் மீண்டும் தமிழுக்கு வந்தேன். முந்தையை பகையை எல்லாம் மறந்துவிட்டு தயாரிப்பாளர்தங்கராசுவிடமே மீண்டும் போய் வாய்ப்பு கேட்டேன். அவர் ஒரு படத்துக்கு பூஜை போட்டிருந்தார்.

நான் போய் சான்ஸ் கேட்டதும் ஓகே சொன்னார். ஆனால், தனியா வா என்று கூப்பிட்டு, நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் நீஎனக்கு ஒத்துழைக்கனும் என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். அப்படியே ஓடி வந்துவிட்டேன்.

அதே போல இன்னொரு புது டைரக்டரும் கூப்பிட்டுவிட்டு மேக்-அப் டெஸ்ட் எடுத்தார். சான்ஸ் தருவதாக சொல்லிவிட்டுஏதோதோ பேசினார். தேவையில்லாத விஷயங்களைப் பேசிவிட்டு, பெரிதாக சிரித்தார். என்ன எதிர்பார்த்தாரோதெரியவில்லை. அவரது நோக்கம் தெரிந்து நான் விலகியதால், அப்புறம் கூப்பிடவே இல்லை.

கோடம்பாக்கத்தில் நல்லவர்களோடு கெட்டவர்களும் கலந்து கிடக்கின்றனர்.

இவ்வாறு கோலிவுட்டில் நடக்கும் அசைவ விஷயங்களை ஓபனாகவே போட்டு உடைத்துள்ளார் ராதா. தயாரிப்பாளர்தங்கராசுவை நேரடியாகவே அவர் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டியது அவரது தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தங்கராசு கூறுகையில்,

ராதாவின் புகார் அபாண்டமானது. 23 வருடமான சினிமாவல் உள்ளேன். ஒரு நடிகையை அனுபவிக்க யாரும் ரூ. 2 கோடிபோட்டு படமெடுக்க மாட்டார்கள்?.

சுந்தரா டிராவல்சில் அறிமுகப்படுத்தும்போதே அவரது நடத்தை குறித்து சிலர் தவறாக சொன்னார்கள். ஆனாலும் நான் அதைகாதில் வாங்காமல் நடிக்க வைத்தேன்.

அதன் பின்னர் ராதாவுக்கு யாருக்கும் சான்ஸ் தரவில்லை. இந் நிலையில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தருமாறு வந்து கேட்டுகண்ணீர் விட்டார்.

நானும் வாய்ப்பு தருவதாக சொல்லி ரூ. 10,000 முன் பணமும் தந்து அனுப்பினேன். ஆனால், அவர் உங்களுக்கு நஷ்டம்ஏற்படுத்தவே சான்ஸ் கேட்கிறார் என்று என்னிடம் யாரோ (???) தொலைபேசியில் எச்சரித்தார்கள். இதனால் ஒதுங்கிக்கொண்டேன்.

யாரோ ஒருவருடன் வாழ்ந்ததாக ராதாவே கூறியிருக்கிறார். ஒரு டைரக்டர்-நடிகருடன் இணைத்தே அவரே முன்பு பேட்டிகொடுத்திருக்கிறார். இவர் ஒரு குடும்பப் பெண்ணே அல்ல.

யார் என்றெ தெரியாத ஒரு பெண்ணுக்கு சோறு போட்டு, துணிமணி வாங்கித் தந்து, நடிக்க வைத்து, புகழும் வாங்கித் தந்த(சம்பளத்தை ஒழுங்கா தரலையே...) தயாரிப்பாளருக்கு அந்த நடிகை காட்டும் நன்றி இது தானா?.

ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அதை வெளியில் சொல்லி அவரது எதிர்காலத்தைபாழாக்க விரும்பவில்லை என்றார் தங்கராசு மிரட்டல் கலந்து.

நெருப்பில்லாம புகையாதே!!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil