»   »  நக்மாவின் ரகஸ்யா டென்சன்

நக்மாவின் ரகஸ்யா டென்சன்

Subscribe to Oneindia Tamil

ரகஸ்யாவை குத்தாட்ட நாயகிகள்தான் கடும் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால் ஒரு ஹீரோயின் இப்போதுரகஸ்யாவைப் பார்த்து டென்ஷன் ஆக ஆரம்பித்திருக்கிறாராம்.

மும்பையிலிருந்து சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானா ரகஸ்யா, தமிழ் சினிமாவின் குத்தாட்டப் பாடல்களுக்கு புதுகெட்டப் கொடுத்தவர். அவரது இடுப்பசைவும், ஒடிப்பும், நெளிப்பும், சுளிப்பும் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்புசுனாமியையே ஏற்படுத்தி விட்டது.

இப்போது அதிக படங்களில் ரகஸ்யாவைப் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட ரகஸ்யாவின் நினைவிலேயேஇருக்கும் ரசிகர்கள் நிறைய. தமிழில் ஆட்டத்தைக் குறைத்துக் கொண்ட ரகஸ்யா இப்போது என்ன செய்கிறார்தெரியுமா?

போஜ்புரி படங்களில் அம்மணிதான் பிசியான நாயகியாக இருக்கிறாராம். கை நிறையப் படங்களுடன் போஜ்புரிரசிகர்களை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறாராம் ரகஸ்யா.

அங்கேயும் குத்தாட்டமா என நினைக்காதீர்கள். போஜ்புரி படங்களில் ரகஸ்யா சிங்கிள் ஹீரோயினாக பின்னிஎடுத்து வருகிறார். போஜ்புரி படங்களில் இப்போதைக்கு முன்னணி நிாயகியாக இருப்பவர் ஜோவின் அக்காநக்மாதான்.

ஆனால் அவருக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருக்கிறாராம் ரகஸ்யா.

நக்மாவுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் கபால் கபால் என பாய்ந்து பாய்ந்த புடுங்கி நடிக்கஆரம்பித்துள்ளாராம் ரகஸ்யா. நக்மாவை விட படு சிறப்பாக ஒத்துழைப்பதாலும், போனஸாக குத்தாட்டத்தையும்சேர்த்துக் கொடுப்பதாலும் நக்மாவை விட்டு விட்டு ரகஸ்யாவை நோக்கி போஜ்புரி தயாரிப்பாளர்கள் சாயத்தொடங்கியுள்ளார்களாம்.

தமிழில் ஒரு பாட்டுக்கு ஆட அதிகபட்சம் 10 லட்சம் வரை வாங்கி வந்தார் ரகஸ்யா. ஆனால் போஜ்புரிபடங்களில் நடிக்க வெறும் 5 லட்சம்தான் தருகிறார்களாம். இருந்தாலும் நிறையப் படங்களில் நடிப்பதால் படுசெல்வாக்காகத்தான் இருக்கிறாராம் ரகஸ்யா.

ரகஸ்யாவின் எழுச்சியால் கடுப்பாகியுள்ள நக்மா, ரகஸ்யாவை எப்படி டேக்கிள் செய்வது என்பது தெரியாமல்விழி பிதுங்கிப் போயுள்ளாராம்.

Read more about: nagma angry on ragasya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil