»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

"தென்னிந்தியாவின் அல்பசினோ" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ரகுவரன் மீண்டும் ஒருசோதனையில் சிக்கியுள்ளார். அவரைத் தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து, சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்த நடிகை ரோகிணி அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்.

"ஏழாவது மனிதன்" என்ற படத்தில் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ரகுவரன். தனது நடிப்புத்திறமையால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் அவர் தனி இடம் பெற்றுள்ளார்.

நாயகனாக அறிமுகமானாலும் பின்னர் அவர் வில்லன் வேடங்களில் சக்கைப் போடு போட்டார். வில்லன்நடிப்புக்குத் தனி இலக்கணம் வகுத்து தனிப் பாதையில் நடந்து சென்ற ரகுவரன் பின்னர் குணச்சித்திர நடிப்பிலும்வெளுத்துக் கட்டி பன்முக நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

இடையில் சில ஆண்டுகளுக்குப் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாகிசீரழிந்தார் ரகுவரன். உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பழக்கத்திலிருந்துவிடுபட்டார்.

அதன் பிறகு மலையாள நடிகை ஜெயபாரதியுடன் அவர் குடும்பம் நடத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ரகுவரன் மீது அப்போது பிரபல நடிகையாக இருந்த ரோகிணி காதல் கொண்டார். நடிகை ரேவதியின்முயற்சியால் இவர்களது காதல் மேலும் வளர்ந்து, கல்யாணத்தில் முடிந்தது.

கல்யாணத்திற்குப் பின் ரகுவரன் முற்றிலும் மாறினார். அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டொழித்து விட்டுபுதுமனிதனாக மாறி, தமிழ்த் திரையுலகில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த இந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கையில் சிலமாதங்களாகப் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

சமீபகாலமாக ரகுரவரனுக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் மனம் நொந்து போயிருந்த அவர், மீண்டும்போதைப் பொருட்களை நாடத் தொடங்கியதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி, அவருடன் சண்டை போடத் தொடங்கியுள்ளார். அடிக்கடி இந்தச் சண்டைநடக்கவே வீட்டில் நிம்மதி தொலைந்து போகத் தொடங்கியது.

இந்தச் சண்டை வலுத்து இப்போது ரோகிணி தன் 5 வயது மகன் சாய்பிரசாத்துடன் தனியாகக் குடிபோய் விட்டார்.சென்னை-வளசரவாக்கம் பகுதியில் தன் மகனுடன் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து குடிபுகுந்துள்ளார்அவர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரகுவரன் என்ன செய்வதென்று தெரியாமல் மாம்பலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். தனது மகனை ரோகிணியிடமிருந்து பிரித்துக் கொடுக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால் பெண்களுக்கு எதிரான புகார்களை மட்டுமே நாங்கள் விசாரிப்போம். பொதுக் காவல் நிலையத்தில்சென்று புகார் கொடுங்கள் என்று அங்கு கூறப்பட்டது.

ஆனால் அங்கு சென்று புகார் கொடுக்காத ரகுவரன், கண்கள் கலங்கிய நிலையில் வீடு திரும்பி விட்டார். மனைவிரோகினி தன்னை விட்டுப் பிரிந்து போனதால் ரகுவரன் மிகவும் அப்செட் ஆகியுள்ளார்.

எப்போது பார்த்தாலும் அழுது கொண்டிருப்பதாக அவரது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர்.சாய்பாபாவின் தீவிர பக்தரான ரகுரவன், அவரது படத்திற்கு முன்பு உட்கார்ந்து அழுதவண்ணம் இருப்பதாகவும்அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திரைலையுலகத் தம்பதிகளுக்கு இப்போது நேரம் சரியில்லை போலும். முன்பு நடிகர், இயக்குநரான பார்த்திபன்மற்றும் குழந்தைகளை விட்டு நடிகை சீதா பிரிந்து போனார். நடிகர் கமல்ஹாசனை விட்டு அவருடைய மனைவிசரிகா பிரிந்து போனார்.

இந்நிலையில் இப்போது ரகுவரனை விட்டுவிட்டு ரோகிணி பிரிந்து போய் விட்டார். நல்ல நடிகரான ரகுவரனுக்குநேர்ந்துள்ள இந்த சோகம் விரைவில் அகல வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா உலகிற்குக் கிடைத்துள்ளஇந்த நல்ல நடிகரின் சேவை தொடரும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil