»   »  'விரல்' நடிகருக்கு அம்மாவான 'மழை' நடிகை!

'விரல்' நடிகருக்கு அம்மாவான 'மழை' நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையில் ஆடிப்பாடிய நடிகை விரல் நடிகரின் அம்மாவாக நடிக்கப் போகிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகரின் ஜோடியாக நடித்து இளம் நடிகருடன் மழையில் ஆடிப்பாடிய நடிகை அவர். பெரிதாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு அடுத்தடுத்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

இதனால் கிடைத்த வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் விரல் நடிகர்-சர்ச்சை இயக்குநரின் புதிய படத்தில் நடிகருக்கு அம்மாவாக நடிகை ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்திப் படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார் என்றாலும் தமிழில் தன் வயதையொத்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பது, நடிகைக்கு இதுவே முதல்முறை.

நடிகையின் இந்த புதிய முடிவு கோலிவுட்டில் ஆச்சரிய அலைகளை உண்டு பண்ணியிருக்கிறது. இதற்குமுன் அம்மா வேடத்தில் நடிக்க விண்ணைத் தாண்டாத நடிகையிடம் கேட்டு, நடிகை அவரை லெப்ட் அண்ட் ரைட் விட்டு விளாசியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Rain Actress Play Mother Role in Finger Actor next movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil