»   »  'வட போச்சே..’னு பீல் பண்ணப் போறாங்க... நம்பர் நடிகையை கலாய்க்கும் ரெயின் நடிகை!

'வட போச்சே..’னு பீல் பண்ணப் போறாங்க... நம்பர் நடிகையை கலாய்க்கும் ரெயின் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வம்பு நடிகரின் புதிய படமொன்றில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் ஆபர் கிடைத்தது சின்ன நம்பர் நடிகைக்கு. அந்த கதாபாத்திரத்திற்கும் வம்பு தான் ஜோடி.

ஏற்கனவே, சூரிய நடிகரின் ஆயிரம் படத்தில் ரன் நடிகை இந்த விபரீத முயற்சியை பரீட்சித்துப் பார்த்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரத்தை விட இளம் நாயகிகளின் காட்சிகளே அதிகம் பேசப்பட்டது.

Rain actress thanks small number actress

எனவே, இந்த நிலை தனக்கும் வந்து விடக்கூடாது எனக் கருதி, வம்பு பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்தார் நம்பர். கூடவே, நாயகியாக நடித்து வரும் தனக்கு இந்த வயதான வேடம் இமேஜைக் கெடுத்து விடும் என கருதினார்.

இதனால் இந்த வாய்ப்பு மழை நடிகை கைக்கு மாறியது. ஏற்கனவே தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மழை நடிகை இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இந்தப் படத்தில் அம்மாவாக நடித்தாலும் கதைப்படி நாயகிக்கு நாயகனுடன் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாம். ஒரு டூயட் பாடல் கூட இருக்கிறதாம்.

எனவே, இந்தப் பட வாய்ப்பு மூலம் மீண்டும் தமிழில் தனக்கு புதிய படங்கள் கிடைக்கும் என மழை நடிகை நம்புகிறாராம். இதனால் இந்த வாய்ப்பை மறுத்த நம்பர் நடிகை, பட ரிலீசுக்குப் பின்னர் ரூம் போட்டு அழப் போகிறார் என தெரிந்தவர்களிடம் கூறி வருகிறாராம்.

English summary
The kollywood sources says that the rain actress is thanking small number actress for rejecting finger actor's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil