இனி புரமோஷன்களுக்கு வருவதில்லை... முடிவெடுத்த ராஜமாதா!
ராஜமாதா நடிகைக்கு வயதானாலும் இன்னமும் ஹீரோயின்களுக்கு நிகரான இமேஜ் இருக்கிறது. அவரது கம்பீரமும் நடிப்பும் நல்ல நல்ல வேடங்களாக வாங்கித் தருகிறது. பொங்கலுக்கு ரிலீஸான படம் ஒன்றில் கூட சிறப்பாக நடித்திருந்தார்.
அந்த படத்தின் சக்சஸ் மீட்டை நான்கு படங்களின் விழாக்களில் ஒன்றாகச் சேர்த்து நடத்தினார் தயாரிப்பாளர்.

இந்த நிகழ்விற்கு தயாரிப்பாளர் சொல்லியிருந்த நேரத்தில் சரியாக வந்துவிட்டார் ராஜமாதா. ஆனால் படத்தின் நாயகன், நாயகி வரத் தாமதமானதால் சுமார் மூன்று மணி நேரம் சும்மாவே உட்கார வேண்டிய நிலைமை நடிகைக்கு ஏற்பட்டது. இதில் ராஜமாதா கோபமாகிவிட்டாராம்.
இனி புரமோஷன்களுக்கு வருவதில்லை என்று இந்த கசப்பான சம்பவத்தின் எதிரொலியாக முடிவெடுத்துள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications