»   »  ரம்பாவின் - இனி ஒன்லி முடிவு

ரம்பாவின் - இனி ஒன்லி முடிவு

Subscribe to Oneindia Tamil

சக நடிகைகளை தனது தொடையழகால் நடு நடுங்க வைத்த ரம்பா குத்தாட்ட நாயகியாக அவதாரம் எடுக்கிறார்.தெலுங்கிலிருந்து தனது குத்து ரவுண்டைத் தொடங்குகிறாராம்.

உழவன் தான் ரம்பாவின் முதல் படம். ஆனால் அவர் பெத்த பேரு எடுத்தது உள்ளத்தை அள்ளித்தா. அதன் பிறகு ரம்பாவின்ரவுசு ஆரம்பமானது. மூணு, நாலு வருஷத்திற்கு முன்பு வரை ரம்பாவின் ரங்கோலி ஆட்டத்தையும், பாட்டத்தையும் கண்டுமெய் மறந்து கிடந்தனர் ரசிகர்கள்.

தொடை தட்டித் தெனாவட்டாக திரிந்து கொண்டிருந்த ரம்பா, இடையில் தேவையில்லாமல் ஒரு படத்தை எடுத்து கையைச்சுட்டுக் கொண்டார். பட்ட காலில் பளார் அடி போல அடுத்தடுத்து சறுக்கலாகி சரிந்து போனார் ரம்பா.

ஒரு வழியாக ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும் மீண்டு வந்துள்ள ரம்பா இப்போது எங்கும் நாயகி வாய்ப்பு கிடைக்காமல்நொந்து போயுள்ளார். போஜ்புரி படத்தில் சமீபத்தில் வாய்ப்புகள் கிடைக்கவே அதையும் விடாமல் அட்டெண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

இடையில் தொய்ந்து போயிருந்த தனது அழகை நீட்டி நிமிர்த்தி பழைய பாங்குக்குத் திரும்பியுள்ள ரம்பா, அடுத்த ரவுண்டுக்குஅட்டகாசமாக தயாராகியுள்ளார். அதாவது குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடப் போகிறார் ரம்பா.

ஹீரோயின் வாய்ப்புகளை மட்டும் எதிர்பார்த்திருந்தால் சரிப்படாது என்று தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எடுத்துச்சொல்லியதால், குத்துப் பாட்டில் குதிக்க முடிவு செய்துள்ளார் ரம்பா.

தெலுங்கிலிருந்து தனது குத்து ரவுண்டை கோலாகலமாக தொடங்கும் ரம்பா, இப்போது சேதமுத்ரு என்ற படத்தில்அட்டகாசமான ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம்.

படு ரிச்சாக வந்துள்ளதாம் ரம்பாவின் ரவுசு ஆட்டம். இந்தப் படம் வெளி வந்த பிறகு ரம்பாவின் குத்துக்கு ரொம்ப நல்லவரவேற்பு இருக்குமாம். ரம்பாவும் அந்த நம்பிக்கையில்தான் உள்ளார்.குத்தாட்ட குமரிகளே உஷார்...

Read more about: ramba to do single numbers
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil