»   »  ரவளிக்கும் ஆகிப் போச்சாம்!

ரவளிக்கும் ஆகிப் போச்சாம்!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் சீமைப் பசு ரவளிக்கு ரகசியமாக ஹைதராபாத்தில் கல்யாணம் ஆகி விட்டதாம். ஆனால் அம்மணிகல்யாணச் செய்தியை பகிரங்கப்படுத்தாமல் கமுக்கமாக இருக்கிறாராம்.

விஜயகாந்த்துடன் ஜோடி போட்டு சினிமாவுக்கு அறிமுகமானவர் ரவளி. அவர் நடித்த முதல் படம்வெளியாவதற்கு முன்பே அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். பலானப் படத்தில் நடித்தவர் என்று வந்தசெய்தியால் ரவளி வெக்ஸ் ஆகிப் பானார்.

ஆனாலும் பார்த்திபன் போன்றவர்களின் பேருதவியாலும், பேராதரவாலும் ரவளிக்கும் படங்கள் கிடைத்தன.குட்டி குட்டி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு திறமை காட்டி வந்தார் ரவளி.

பார்த்திபனால் சீமைப் பசு என அன்பாக வர்ணிக்கப்பட்ட ரவளி, தனது செழுமையான அழகால் கோலிவுட்டில்ஒரு குட்டி ரவுண்டு போட்டார். அவரை விட அட்டகாசமான பசுக்கள் அலை அலையாய் வந்து குவியவேரவளியை சீண்டுவார் யாரும் இல்லாமல் போனது.

இதனால் தாயகமான ஹைதராபாத்துக்கே இடம் பெயர்ந்தார் ரவளி. அங்கு தெலுங்குப் படங்களில் திறமை காட்டிவந்த ரவளிக்கு தெலுங்கும் கொஞ்ச நாளில் அத்துவிடவே அடையாளம் இழந்தார். சமீபத்தில் சென்னையில்இருந்த தனது சொத்து பத்துக்களை விற்று ஹைதராபாத்திலேயே நிரந்தரமாகி செட்டிலாகி விட்டார்.

அவருக்கு ஒரு பெரிய புள்ளி அடைக்கலமும், ஆதரவும் கொடுத்துள்ளதாக அரசல் புரசலாக செய்திகள்வெளியாகின.

இந்த நிலையில் ரவளிக்கு சமீபத்தில் கல்யாணம் முடிந்து விட்டதாக செய்தி வருகிறது. இதை ரவளி மறுக்கவும்இல்லை, சரி என்று சொல்லவும் இல்லை.

கல்யாணம் நடந்தது உண்மைதான் என்று கோலிவுட் பக்கமும் பேசிக் கொள்கிறார்கள்.

நல்ல விஷயம்தானே...

Read more about: actress ravali got married
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil