»   »  ரவளிக்கு மாப்பிள்ளை வேட்டை!

ரவளிக்கு மாப்பிள்ளை வேட்டை!

Subscribe to Oneindia Tamil

சீமைப் பசு என்று நடிகர் பார்த்திபனால் செல்லமாக அழைக்கப்பட்ட ரவளிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளைபார்க்கத் தொடங்கி விட்டார்களாம்.

ரவளியை நிறையப் பேர் மறந்து போயிருக்கலாம். ஆனால் அவரது கவர்ச்சியையும், உடல் கட்டமைப்பையும்யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழில் ஒரு ரவுண்டு வந்து ஓய்ந்தவர் ரவளி. முன்னணி நடிகையாக நிறையப் படங்களில் இவர் நடித்து வந்தார்.விஜயகாந்தின் படம் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு ரவளி அறிமுகமானார்.

அதன் பின்னர் பார்த்திபன், சத்யராஜ், வினீத், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு நடித்துமுடித்தார்.

பார்த்திபனுக்கும், சத்யராஜுக்கும் மிகவும் நெருக்கமானவராக முன்பு கிசுகிசுக்கப்பட்டவர் ரவளி. அவருக்குசத்யராஜ் பெரிய அளவில் பண உதவியும் செய்ததாக பேசப்பட்டது.

இப்படியாக இருந்து வந்த ரவளிக்கு தமிழில் திடீரென பட வாய்ப்புகள் குறைந்ததால் சொந்த மாநிலமானதெலுங்கு தேசத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு கையில் கிடைத்த சில படங்களில் நடித்து வந்தார். அங்கும்வாய்ப்புகள் குறையவே இப்போது பேசாமல் வீட்டில் இருக்கிறார்.

ஹைதராபாத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட ரவளிக்கு சொத்து பத்தில் கொஞ்சமும் குறைவில்லை. பட வாய்ப்புகள்இல்லாவிட்டாலும் கூட, பார்க்க வேண்டிய காசைப் பார்த்து, கட்ட வேண்டிய வகையில், சூப்பர் வீட்டைஹைதராபாத்தில் கட்டி பக்காவாக செட்டிலாகியுள்ளார்.

இதற்கு மேலும் தங்களது அருமை மகளை காயப் போட வேண்டாம் என்று முடிவு செய்த அவரது பெற்றோர்அவருக்கேற்ற காளையைத் தேட தீர்மானித்து சொந்த பந்தங்கள், நட்பு வட்டாரத்தில் ரவளியின் ஜாகத்தைக்கொடுத்து மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார்களாம்.

விரைவில் ரவளி குடும்பம், குடித்தனமுமாக செட்டிலாகி விடுவார் என்று ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள்கூறுகின்றன.

சீமைப் பசுவை அடக்கப் போகும் காங்கேயம் காளை யாரோ!

Read more about: ravali getting marriage soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil