கமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா!

ரவி கிருஷ்ணாவும், கமலினி முகர்ஜியும் இரு படங்களில் சேர்ந்து நடித்தனர். முதல் படத்தில் லேசாக ஆரம்பித்த காதல், அடுத்த படத்தில் பிசின் போட்ட மாதிரி ஒட்டிக் கொள்ள வைத்துவிட்டதாம்.
ஆனாலும் தங்கள் காதலை இதுவரை ரகசியமாக மறைத்து வந்தார்களாம். தற்போது விஷயம் லீக் ஆகி, தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ரவி கிருஷ்ணா ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் செட்டிலாகிவிட்டது இவர் குடும்பம். கமலினி வங்காளி. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் மூடில் இல்லையாம் ரவி கிருஷ்ணா. 'சினிமாவில்தான் ஜெயிக்க முடியல.. காதலிலாவது ஜெயித்து, புத்துணர்ச்சியோடு சினிமாவுக்கு வருவேன்' என்கிறாராம் சமாதானம் பேசப் போனவர்களிடம்!
Comments
7 ஜி ரெயின்போ காலனி a m rathnam ஏ எம் ரத்னம் தெலுங்குப் படம் பெற்றோர் எதிர்ப்பு ரவி கிருஷ்ணா கமலினி காதல் kamalini mukherjee ravi krishna telugu films


Click it and Unblock the Notifications