பொண்டாட்டி தாசனாக மாறிய பிரகாச நடிகர்.. அவர் சொல்றதை கேட்டு அப்படியே நடக்கிறாராம்!

By Staff

சென்னை: மனைவி சொல்லே மந்திரம் என மாறி விட்டாராம் அந்த பிரகாச நடிகர் என கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக அடிபட்டுள்ளது.

தியேட்டர்களை ஒரே அடியாக கைவிட்டு விட்டு ஒடிடி பக்கம் சாய மொத்த காரணமும் அவரது மனைவி நடிகை தான் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

தயாரிப்பிலும் தனது பெயர் முதன்மையாக வரவேண்டும் என விடாப்பிடியாக இருந்து வருகிறாராம் அந்த மனைவி நடிகை.

தியேட்டர்கள் வேண்டாம்

தியேட்டர்கள் வேண்டாம்

இனி தியேட்டர்களுக்கு சுத்தமாக எதிர்காலமே இல்லை என்று முடிவே கட்டி விட்டார் அந்த பிரகாச நடிகர். தான் தயாரிக்கும் அத்தனை படங்களையும் ஒடிடியில் வெளியிடவும் திட்டமிட்டு ஏகப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு இருக்கிறாராம்.

ஒடிடி பக்கம்

ஒடிடி பக்கம்

உலகளவில் சினிமாவின் எதிர்காலமே இனி ஒடிடியை மட்டுமே நம்பி இருப்பதாகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இனி தியேட்டர்களை மறந்து விட்டு இங்கே தான் வருவார்கள் என்றும் முன்பே கணித்த பிரகாச நடிகர் மொத்தமாகவே ஒடிடி பக்கம் சாய்ந்து விட்டார் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

தனது தயாரிப்பில் வரிசையாக பல படங்களை அசுர வேகத்தில் தயாரித்து வெளியிட அதி தீவிரம் காட்டி வருகிறார் அந்த பிரகாச நடிகர். மற்ற முன்னணி நடிகர்கள் இன்னமும் ஒடிடி பற்றிய யோசனையில் இருக்கும் போது தொடர்ந்து பல படங்களை ஒடிடிக்கு விற்று காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற முடிவில் திடமாக உள்ளார்.

கம்மி பட்ஜெட்டில்

கம்மி பட்ஜெட்டில்

ஒடிடிக்குத் தானே படம் எடுக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கும் பிரகாச நடிகர் கம்மி பட்ஜெட்டில் படங்களை வரிசையாக எடுத்து வெளியிட்டு வருகிறாராம். குறைந்தது 50 நாட்கள் மட்டுமே படத்தின் மொத்த வேலைகளும் முடித்து தர வேண்டும் என இயக்குநர்களுக்கு தனியாக ஆர்டர்களும் பறந்துள்ளதாக கோடம்பாக்கம் கோடாங்கி கூறியுள்ளார்.

தயாரிப்பு கவனிப்பு

தயாரிப்பு கவனிப்பு

பிரகாச நடிகர் ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருவதால், தயாரிப்பு மேற்பார்வை மொத்தத்தையும் அவரது மனைவி நடிகை தான் பார்த்துக் கொள்கிறார் என்றும், இந்த ஒடிடி பக்கம் போகும் முடிவே அவருடையது தான் என்கிற ரகசியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருகின்றன.

மறு பேச்சே இல்லை

மறு பேச்சே இல்லை

மனைவி பேச்சுக்கு மறு பேச்சே இல்லாமல் அவர் சொல்வதற்கு எல்லாத்துக்கும் ஓகே சொல்லி வருகிறாராம் அந்த பிரகாச நடிகர். தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு சிக்கல் வந்தாலும் அதை எளிதாக கையாண்டு விடலாம். இப்போதைக்கு ஒடிடி தான் முக்கியம் என்கிற முடிவில் இருவருமே உறுதியாக உள்ளார்களாம்.

முன்னுரிமை

முன்னுரிமை

தயாரிப்பில் தனக்கு தான் முன்னுரிமை வரவேண்டும் என்பதிலும் கூடுதல் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் மனைவி நடிகை. பல கோடி பணம் போட்டு தயாரித்து படங்களை நெடுநாள் தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருந்து கிடப்பில் போட்டால் ஒரு லாபமும் வராது என்கிற கணக்கிலும் கவனமாக செயல்பட்டு வருவதால் மனைவி சொல்லுக்கு முழு உரிமையும் கொடுத்துள்ளாராம் அந்த பிரகாச நடிகர்.

வாய்ப்பு தருகிறோம்

வாய்ப்பு தருகிறோம்

சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பிரபலங்களுக்கு பெரிய பேனரில் வாய்ப்பு தருகிறோம் என்கிற பெயரில் குறைவான சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்து வருவதாகவும் சிலருக்கு சம்பளமே தராமலும் வேலை வாங்கி வருவதாகவும் ஏகப்பட்ட குமுறல்களும் கோலிவுட்டில் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

எகிறும் எதிர்ப்பு

எகிறும் எதிர்ப்பு

பிரகாச நடிகரின் இந்த திடீர் அதிரடி முடிவால் ஒட்டுமொத்த தியேட்டர் உரிமையாளர்களும் அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். இப்படி முன்னணி நடிகராக தங்களை வளர்த்து விட்ட துறைக்கே துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சரி பண்ணிக்கலாம்

சரி பண்ணிக்கலாம்

தியேட்டர்கள் திறக்காத நிலையில் தான் ஒடிடிக்கு செல்கிறோம் என்றும், தியேட்டர் ரிலீசுக்காக சில படங்களில் ஹீரோ நடித்து வருகிறார் என்றும் கூறி சமாதானமாக பேசி அந்த பிரச்சனையையும் சரி கட்டி விடலாம் என்றும் மனைவி நடிகை கொடுத்துள்ள பலே ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்து சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிவெடுத்து உள்ளாராம் அவர்.

சிலருக்கு உதவி

சிலருக்கு உதவி

அதையும் மீறி பிரச்சனை செய்பவர்களுக்கு சில உதவிகளை செய்து அவர்களையும் ஆஃப் பண்ணும் முயற்சியிலும் பிரகாச நடிகர் பக்காவாக வேலை செய்து வருவதால் இப்போதைக்கு இண்டஸ்ட்ரியில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மாறாக பலே வியாபாரம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X