மாஸ் நடிகருக்கு மறைமுகமாக தூண்டில் போட்ட விருது நடிகை.. எங்கேயோ இடிக்குதே?

By Staff

சென்னை: மாஸ் நடிகருடன் எப்படியாவது மீண்டும் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்கிற வெறியுடன் இருக்கும் அந்த விருது நடிகை அவருக்கு மறைமுக தூண்டில் போட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மாஸ் நடிகரின் அடுத்த படம் குறித்த பரபரப்பு தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்நிலையில், விருது நடிகை ஏன் வான்டட்டா இப்படியொரு விஷயத்தை மாஸ் நடிகருக்காக செய்திருக்கிறார்? என்கிற கேள்வியும் கோலிவுட்டில் பற்றி எரிகிறது.

இரு முறை

இரு முறை

மாஸ் நடிகருடன் ஏற்கனவே இரு முறை ஜோடி போட்டு அந்த விருது நடிகை நடித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு முறை ஜோடி போட்டு நடிக்கும் முயற்சியை விருது நடிகை தொடர்ந்து செய்து வருகிறார் என தகவல்கள் வெளியான வண்ணமே உள்ளன. இந்நிலையில், நடிகை போட்ட தூண்டில் குறித்த ஆச்சர்ய தகவல் ஒன்றும் கசிந்திருக்கிறது.

வேற ஏரியா

வேற ஏரியா

சொந்த ஏரியாவை விட்டு வேற ஏரியாவில் படம் பண்ண முடிவு செய்துள்ள மாஸ் நடிகரின் திடீர் முடிவு கோடம்பாக்கத்தில் பலருக்கும் மன கசப்பை உண்டாக்கி விட்டதாகவும், இப்படியே அடுத்த அடுத்த படங்களுக்கும் இவர் பக்கத்து மாநிலம், வட மாநிலம் என சென்று விட்டால் நம்ம நிலை என்னவாகும் என சில தயாரிப்பாளர்களும் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகைக்கு ஆசை

நடிகைக்கு ஆசை

கோலிவுட்டில் மார்க்கெட்டை இழந்து விட்ட அந்த விருது நடிகை மீண்டும் பழையபடி மார்க்கெட்டை பிடிக்க முயற்சித்து வருகிறார். நடிகருடன் மீண்டும் நடித்தால் தான் தனது ஆசை நிறைவேறும் என்றும் அறிந்து கொண்ட அவர் தொடர்ந்து அந்த நடிகர் படத்தில் நடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து மிஸ் ஆகுது

தொடர்ந்து மிஸ் ஆகுது

மாஸ் நடிகரின் படங்களில் இப்போதெல்லாம் கோலிவுட் நடிகைகளையே பார்க்க முடியவில்லை என்பதால் அந்த நடிகையின் விருப்பம் தொடர்ந்து மிஸ் ஆகிக் கொண்டே வருகிறது. தற்போது நடித்து வரும் படத்திலும் அந்த நடிகை நடிக்க முயற்சித்து தோல்வியை தழுவி உள்ளார்.

மறைமுகமாக தூண்டில்

மறைமுகமாக தூண்டில்

இந்நிலையில், மாஸ் நடிகர் படத்தில் நேரடியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், மறைமுகமாக டோலிவுட் தயாரிப்பாளரை வைத்து விருது நடிகை போட்ட துண்டில் வொர்க்கவுட் ஆகி விட்டதாம். தனக்கான சம்பளத்தை தாராளமாக தயாரிப்பு தரப்பு தர சம்மதம் தெரிவித்ததும் நடிகர் அந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம்

ஜோடி அவங்கதான்

ஜோடி அவங்கதான்

சில இந்தி பட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டாலும் இப்படியொரு வாய்ப்பை மறைமுகமாக மாஸ் நடிகருக்கு ஏற்படுத்திக் கொடுத்த விருது நடிகை தான் மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடிக்கப் போவது உறுதியாகி விட்டது.

ரசிகர்களுக்கு பிடிக்குமா

ரசிகர்களுக்கு பிடிக்குமா

ஏற்கனவே அந்த விருது நடிகை தனது உடல் தோற்றத்தை மாற்றி ஓடாய் தேய்ந்து போன நிலையில், அந்த நடிகையுடன் மீண்டும் நடிக்காதீங்க என ஏகப்பட்ட நெருங்கிய ரசிகர் வட்டாராமே கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மீண்டும் அதே நடிகையுடன் மாஸ் நடிகர் ஜோடி சேர உள்ள நிலையில், அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரச்சனையை சமாளிக்க

பிரச்சனையை சமாளிக்க

அந்த பிரச்சனையை சமாளிக்க இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையை படத்தில் களமிறக்கி கவர்ச்சி விருந்து கொடுத்துட்டா போச்சு என்றும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. எப்படியோ விருது நடிகையின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X