பிட்டு பட வாய்ப்பு கூட கிடைக்கல.. ஒரே ஒரு தப்பால் தடமாறிய ரியாலிட்டி ஷோ நடிகையின் வாழ்க்கை?
சென்னை: பெரிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு காதல் விளையாட்டுகளில் அதிகம் கவர்ந்த நடிகைக்கு அந்த ஷோவில் இருந்து வெளியே வந்ததும் சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தாராளமாகவே குவிந்தன. ஆனால், திடீரென யார் கண்ணு பட்டதோ, என்ன ஆச்சோ தெரியவில்லை. பிட்டு படத்தில் நடிக்கக் கூட நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பி வருகிறாராம்.
கவர்ச்சி குயினாக இளைஞர்களை கவர்ந்து வந்த அந்த நடிகைக்கு தற்போது படங்களில் மட்டுமில்லை சின்னத்திரை, விளம்பரங்கள் கூட கிடைக்கவில்லையாம். அதற்கு முக்கிய காரணம் அவர் செய்த அந்த ஒரே ஒரு தப்பு தான் என்கின்றனர்.

தனது முகத்தை அழகாக மாற்ற அவர் செய்த விஷயம் தான் இன்று வரை அவரது சினிமா கரியருக்கே மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் அட்டகாசம்: அடுத்த நம்பர் நடிகையே நாம் தான் என்கிற ரேஞ்சுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்ததும் சரியான ஆட்டத்தை போட்டு வந்த கிளாமர் குயின் தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் பொட்டிப் பாம்பாக அடங்கி விட்டார் என்கின்றனர். சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் ஆரம்பத்தில் இப்படித்தான் அடுத்த மாஸ் ஹீரோ நாம தான் என பெரிய படத்துடன் வந்து குதித்தாலும், சரியான சரக்கு இல்லை என ரசிகர்கள் டிவியில் இருந்து வெறும் உழைப்பால் மட்டுமே வரும் இளம் நடிகர்களை ஸ்டார் ஆக்கி விடுகின்றனர். இதே கதிதான் அந்த நடிகைக்கும் ஆகிவிட்டது என்கின்றனர்.
பிட்டு படத்திலும் சான்ஸ் இல்லை: சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடிகையை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கி விட்ட நிலையில், ஆடை குறைப்பு எல்லாம் நமக்கு அசால்ட்டாக வருமே உல்லு வெப்சீரிஸில் நடித்து காசு சம்பாதித்து விடலாம் என இங்கே இருந்து கிளம்பிச் சென்று சில பிட்டு வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களில் நடிக்கக் கூட அவர் முயற்சி செய்ததாகவும் ஆனால், அங்கேயும் நடிகைக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்கிற திடுக்கிடும் தகவல்கள் கோடம்பாக்கத்தில் கசிந்து ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலை உருவாகியுள்ளதாம்.
ஒரே ஒரு தப்பு: வாழ்க்கையில், குறுக்கு வழியில் முன்னேற சில நடிகைகள் தங்களின் தோற்றத்தை மாற்ற லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்கின்றனர். இயற்கை அழகை மாற்றி மெழுகு பொம்மைகளாக மாறி வருகின்றனர். அப்படி ஒரு மெழுகு டாலாக மாற அவர் செய்த வேலை இசகு பிசகாக மாறிதான் இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











