ஹீரோ யாருங்கறதெல்லாம் முக்கியமில்லை.. நிறைய படம் பண்ணனும்.. அக்கரை சீமை அழகியின் ராஜ தந்திரம்!

சென்னை: அந்த பிரபல நிகழ்ச்சி மூலமாக பாப்புலரான அந்த அக்கரை சீமை அழகி, இப்போ ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

Recommended Video

Mugen Rao காதலிக்கு ஏற்பட்ட கொடுமை • Yasmin Nadiah

ஹீரோ யாருங்கறதெல்லாம் முக்கியமில்லை என்றும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தில் முழு கவனமாக செயல்பட்டு வருகிறாராம்.

ரசிகர்கள் சப்போர்ட் இருப்பதால், அவர் எடுத்து வைக்கும் முயற்சிகளும் அவருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கிறார்.

ஹீரோயின் மெட்டீரியல்

ஹீரோயின் மெட்டீரியல்

சர்ச்சைகளுக்கு சற்றும் குறைவில்லாத அந்த பிரபல ஷோவில் கலந்து கொள்வதற்காக அக்கரை சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் தான் அந்த அழகி. இளம் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்புகள் இருப்பதை அறிந்து கொண்ட அவர், நிகழ்ச்சியில், சக போட்டியாளருடன் ரொமான்ஸில் ஈடுபட்டு, தான் ஒரு ஹீரோயின் மெட்டீரியல் என்பதை பலருக்கும் தெரியப்படுத்தினார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

பொதுவாக அந்த தேசத்திலிருந்து வருபவர்களுக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஒரு அன்பும் அரவணைப்பும் இருப்பது இயல்பான ஒன்று தான். அதனை நன்கு அறிந்து வைத்துக் கொண்டு, சரியான விதத்தில் காய்களை நகர்த்தி ஏகப்பட்ட ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்துள்ளார் அந்த இளம் நடிகை.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

ஹீரோயின் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாகவே கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார் அந்த இளம் நடிகை. மேலும், பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்த நடிகையின் கால்ஷீட்டுக்காக தவமாய் தவமிருந்து வருகின்றனராம். லாக்டவுனுக்கு பின்னர் மேலும், சில படங்களிலும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் அரசல் புரசலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அது சரியா இல்லையே

அது சரியா இல்லையே

ஆனால், ஹீரோக்கள் தேர்வில் அந்த நடிகை அவசரப்படுகிறாரோ என்ற குற்றச்சாட்டையும் அந்த நடிகையின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த சிலர் காது படவே பேசத் தொடங்கி உள்ளனர். வயதான நடிகர்களுடனும், மார்க்கெட் இல்லாத நடிகர்களுடனும், புது முக நடிகர்களுடனும் நடித்தால் எப்படி நிலைத்து நிற்பது என்ற கேள்வியை சில ரசிகர்களும் எழுப்பி உள்ளனர்.

கிடைக்கும் வரை லாபம்

கிடைக்கும் வரை லாபம்

ஆனால், அதை பற்றியெல்லாம் தனக்கு கவலை இல்லை என்றும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்றும், கிடைக்கும் வரை லாபம், படங்களை பிடிப்பது தான் லட்சியம். தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலே நினைத்த இடத்தை பிடித்து விடலாம். பெரிய நடிகர்களுக்காக காத்திருந்து நேரத்தை தான் வீணடிக்க விரும்பவில்லை என்ற தெளிவான முடிவில் அந்த நடிகை உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X