அரசியல் பிரபலத்துடன் ரகசிய திருமணமா? ரியாலிட்டி ஷோ நடிகை கணவனை கழட்டிவிட காரணமே அதுதானாம்!

சென்னை: ரியாலிட்டி ஷோ பிரபலம் மற்றும் கவர்ச்சி நடிகையான அவர் தனது கணவரை திருமணம் செய்து கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விட்டார்.

மேலும், கணவர் சித்ரவதை கொடுப்பதாக தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வந்தார்.

இந்நிலையில், அரசியல் பிரபலத்துடன் அந்த நடிகைக்கு இருக்கும் தொடர்பு தான் இந்த பிரச்சனை அனைத்துக்கும் காரணம் என தகவல்கள் கசிந்துள்ளன.

ரியாலிட்டி ஷோ நடிகை

ரியாலிட்டி ஷோ நடிகை

ஆடையின்றி போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வந்த அந்த நடிகையை சமீபத்தில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார் அந்த பிரபல நடிகை. இவர் உள்ளே சென்றதும் கவர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் நிகழ்ச்சி பயங்கரமாக சென்றது.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

கவர்ச்சி நடிகை என்கிற விதிகளை எல்லாம் தாண்டி ஆபாச பட நடிகையாகவே மாறி சமூக வலைதளங்களை அல்லோலகோலப்படுத்தி வந்தார் இந்த நடிகை. இந்நிலையில், அவருக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்த நிலையில், இருவரும் பிரிந்தனர்.

அரசியல்வாதியுடன் தொடர்பு

அரசியல்வாதியுடன் தொடர்பு

கணவர் வீட்டில் இருந்த போதே, அரசியல் பிரபலம் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட் செய்த போது தான் கணவருக்கே அதிர்ச்சியாகி அவரிடம் வாக்குவாதம் நடத்தி உள்ளாராம். அப்போது தான் அரசியல் பிரபலத்துக்கும் நடிகைக்கும் இருக்கும் ரகசிய உறவு பற்றி தெரியவந்தது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என பரபரப்பான பேச்சுகள் தற்போது கசிந்துள்ளன.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்த தயாரிப்பாளரை கழட்டி விட்டு விரைவில் அந்த அரசியல் பிரபலத்தையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறாராம் நடிகை என்கிற திடுக்கிடும் தகவல்களும் லீக்காகி உள்ளன. ஆனால், தற்போதைக்கு அரசியல் பிரபலத்தின் குடும்பம் நடிகையை திருமணம் செய்ய வேண்டாம் என்றும் இது அரசியல் ரீதியாக வேறு சில பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் இதுகுறித்த தகவல்கள் வெளியே பரவாமல் ரகசியமாக காத்து வருகின்றனராம்.

கசியவிட்ட கணவர்

கசியவிட்ட கணவர்

இதுவரை மனைவியின் துரோகத்தையும் அவர் வரம்பு மீறி நடந்து கொண்டதையும் பொறுத்துக் கொண்ட கணவர் இந்த தகவல்களை தெரிந்து கொண்ட நிலையில், இதனை வெளியில் கசியவிடும் முயற்சியில் இறங்கி அந்த அரசியல் பிரபலத்துக்கு சிக்கல்களை உருவாக்கி மனைவிக்கு தகுந்த பாடத்தை புகட்ட காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் பேச்சுக்கள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X