For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலிவுட் வாய்ப்பு குவியுதுன்னு சொன்னாங்களே அந்த ரியாலிட்டி நடிகை.. அது என்ன மேட்டருன்னு தெரியுமா?

  |

  சென்னை: தேவையில்லாமல் வாய் கொடுத்து எதை எதையோ புண்ணாக்கிக் கொண்ட அந்த ரியாலிட்டி ஷோ நடிகை குறித்த பரபரப்பான ரகசியங்கள் கசிந்துள்ளன.

  ஆபாசமாக உடைகளை அணிந்து போட்டோக்களை பதிவிட்டு வந்த அந்த ரியாலிட்டி ஷோ நடிகை சில மாதங்களுக்கு முன்னதாக பாலிவுட் வாய்ப்புகள் தனக்கு குவிவதாக தம்பட்டம் அடித்திருந்தார்.

  உலக தாய்ப்பால் வாரம்...நகுல் மனைவி பதிவிட்ட எமோஷனல் போஸ்ட் உலக தாய்ப்பால் வாரம்...நகுல் மனைவி பதிவிட்ட எமோஷனல் போஸ்ட்

  கூட்டத்தோடு கூட்டமாகவும் சின்ன சின்ன சைடு ரோல்களிலும் நடித்து வந்த அவர், காசுக்காக கசமுசா படத்தில் நடித்து இருப்பதாகவும் விரைவில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

  அதிகரிக்கும் ஆபாசம்

  அதிகரிக்கும் ஆபாசம்

  யூடியூப் சேனல்கள், மொபைல் செயலிகள், ஏகப்பட்ட வெப்சைட்டுகள் என ஆபாச படங்களும், ஆபாச வசனம் பேசும் நபர்களும் அதிகரித்து வருகின்றனர். இவர்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஆபாச படங்களுக்கு எதிராக பாலிவுட்டில் கடுமையான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.

  பிரபலங்கள் கைது

  பிரபலங்கள் கைது

  இந்த ஆண்டு ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் அதனை தயாரித்தவர்கள் என ஏகப்பட்ட பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகையின் கணவரும் வசமாக போலீசில் சிக்கி கம்பி எண்ணி வருகிறார். மேலும், சில நடிகைகளும் வசமாக சிக்கி உள்ளனர்.

  பாலிவுட் வாய்ப்பு

  பாலிவுட் வாய்ப்பு

  தென்னிந்திய கவர்ச்சி நடிகைகளும் பாலிவுட் வாய்ப்பு கிடைப்பதாக நினைத்துக் கொண்டு இந்த ஆபாச படங்களை எடுப்பவர்களின் வலையில் போய் பலரும் சிக்கி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான அந்த சர்ச்சை சூப்பர் மாடலும் இதே போன்ற ஒரு வலையில் சிக்கி இருப்பதாக ஷாக் கொடுக்கும் தகவல் கசிந்துள்ளது.

  பிளாக் மார்க்

  பிளாக் மார்க்

  முன்னணி நடிகர்களை கொச்சையாக பேசி ஏகப்பட்ட இடங்களில் பிரச்சனையை சம்பாதித்துக் கொண்ட அந்த துணை நடிகை கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளும் இன்றி ஃபீல்டை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். புதிதாக லோக்கலில் அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காதபடி பிளாக் மார்க் வைக்கப்பட்டு இருக்கிறது.

  ஆபாச போட்டோஷூட்

  ஆபாச போட்டோஷூட்

  முன்னழகு முதல் மொத்த அழகும் தெரியும் படி ஏகப்பட்ட ஆபாச போட்டோஷூட்களை நடத்தி கவர்ச்சி மாடலாக கலக்கலாம் என நினைத்த அந்த துணை நடிகைக்கு உள்ளதும் போச்சு நொல்லக் கண்ணா என்கிற ரீதியில் முதலுக்கே மோசம் ஆனது போல அவர் செய்த செயல் அவருக்கே பெரிய பின் விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.

  மும்பை அழைக்கிறது

  மும்பை அழைக்கிறது

  இங்கே ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய அந்த துணை நடிகை மும்பை என்னை அழைக்கிறது என்றும் ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் குவிகிறது என்றும் ஒரே அலம்பல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எப்படியானவை என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் தான் தற்போது கசிந்துள்ளது.

  வெப்சீரிஸ் வாய்ப்பு

  வெப்சீரிஸ் வாய்ப்பு

  வெப்சீரிஸ் வாய்ப்பு என்கிற பெயரில் ஆபாச படங்களை எடுத்து தள்ளி வருகின்றனர். பாலிவுட்டில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளே இதற்கு உறுதுணையாக உள்ளனர். சென்சார் இல்லை எந்த பிரச்சனையும் இல்லை ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன என வித விதமாக ரீல் விட்டு பலரையும் சிக்க வைத்து வருகிறார்களாம்.

  கோடிக் கணக்கில் லாபம்

  கோடிக் கணக்கில் லாபம்

  இந்திய பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தால் கோடிக் கணக்கில் பணங்கள் கொட்டி வருவதால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு மோசமாக போட்டோக்களை தாராளமாக பதிவிடும் பெண்களை டார்கெட் செய்து இவர்கள் காய் நகர்த்தி வருகிறார்களாம்.

  வலையில் விழுந்த மீன்

  வலையில் விழுந்த மீன்

  நடிக்கவே தெரியாமல் வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டி வாய்ப்புகளை பெறத் துடிக்கும் சில துணை நடிகைகள் திடீரென கவர்ச்சி குயினாக மாறுவதற்கு பின்னணியில் இருக்கும் பிசினஸ் மிகப்பெரியது என்றும் கூறுகின்றனர். இங்கே கதவு சாத்தப்பட்ட நிலையில், அங்கே போய் பெரிய வலையில் அந்த ரியாலிட்டி நடிகையும் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

  கைது நடவடிக்கை

  கைது நடவடிக்கை

  சென்சார் இல்லாத காரணத்திற்காக ஏகப்பட்ட முன்னணி நடிகைகளே முழு உடலையும் ஆடையின்றி காட்டி ஆபாசமாக நடித்து வருகின்றனர். விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக ஏகப்பட்ட பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் சீக்கிரமே துணை நடிகையும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  English summary
  Reality show actress stuck in really a big trouble. She who reveals about her bollywood chances is nothing but erotica webseries only.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X