நடிச்சா ஹீரோயின் தான்.. அந்த கதாபாத்திரம்லாம் வேணாம்.. அடம்பிடிக்கும் ரியாலிட்டி ஷோ பிரபலம்!
சென்னை: அந்த பெரிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால் சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த பிரபலத்துக்கு வெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மட்டுமே வருவதால் கடுப்பாகி உள்ளாராம்.
சீரியல் நடிகைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் ஏணியாக அந்த ரியாலிட்டி ஷோவை சில பிரபலங்களும் பார்க்கின்றனர்.
பலரும் இருக்கும் பெயரை கெடுத்து விட்டுவிடும் என அந்தப்பக்கம் தலைவைத்துப் பார்க்காமல் தப்பித்துக் கொள்கின்றனர்.

நல்லா ஆடுவார்
பார்க்க சின்னப் பெண் போல இருந்தாலும், அவருக்கும் வயது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. நல்லா நடனம் ஆடும் திறமை கொண்ட அந்த பிரபலத்துக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. ஆனால், அவரது உருவ தோற்றம் தான் அதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

தங்கையாக நடிக்க
நீங்க ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது. வேண்டுமென்றால் தங்கச்சியாக தாராளமாக நடிக்கலாம். உங்களுக்கு ஓகேன்னா ஏகப்பட்ட படங்கள் குவியும் என அந்த பிரபலத்துக்கு சமீபத்தில் சில அழைப்புகள் வந்துள்ளது. நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சட்டென பிடித்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறாராம் அந்த இளம் பிரபலம்.

நடிச்சா ஹீரோயினாத்தான்
ஆனால், வந்த சில வாய்ப்புகளை தட்டிக் கழித்த அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம், நடிச்சா ஹீரோயினாத்தான் நடிப்பேன். தங்கச்சி கதாபாத்திரம், பிரண்ட் கேரக்டர் எல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரே அடியாக சொல்லி விட்டதால், அவருக்கு வந்த வாய்ப்புகளும் கை நழுவி மற்ற சில சின்னத்திரை பிரபலங்களுக்கு சென்று விட்டதாம்.

இணைந்து நடிக்க
மேலும், அதே ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த இன்னொரு பிரபலத்தையும் சினிமாவில் ஹீரோவாக்க சிபாரிசு வேறு செய்து வருகிறாராம். மேலும், இருவரும் இணைந்து ஹீரோ - ஹீரோயினாக விரைவில் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபலங்களுடன் சந்திப்பு
தனது சினிமா வாழ்க்கையை இந்த முறை சரியாக கொண்டு போக வேண்டும் என்பதற்காக சில பிரபலங்களையும் சந்தித்து வருகிறாராம் அந்த இளம் பிரபலம். மேலும், வித விதமான கவர்ச்சி போட்டோஷூட்களையும் நடத்தி இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்க பார்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications