இப்போ தான் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது.. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே.. சோகத்தில் புலம்பும் சிரிப்பழகி!
சென்னை: சில படங்களிலும் நடித்திருந்தாலும் பெரிய அளவுக்கு அந்த நடிகைக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை.
இந்நிலையில், திடீரென சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அவர் மக்கள் அன்பை பெற்று பிரபலமானார்.
ரியாலிட்டி ஷோவில் கலக்கிய அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், கொரோனா பரவலால் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், மீண்டும் தனது வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளதே என புலம்பி வருகிறாராம் அந்த சிரிப்பழகி.

பார்வை திரும்பவில்லை
வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து வந்த அவர், நடிகையாக அறிமுகம் ஆன பின்னரும் பெருமளவில் அவர் மீது ரசிகர்களின் பார்வை திரும்பவே இல்லை. அவர் நடித்த சில நல்ல படங்கள் பாராட்டுக்களை குவித்தாலும், அதன் மூலமாக அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

சின்னத்திரையில் என்ட்ரி
இதனால், அப்செட் ஆன அவர் சமூக வலைதளங்களில் சில கவர்ச்சியான போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்டு வைரலாக்கினார். அதன் மூலம் அவருக்கு திடீரென ரசிகர்கள் கிடைத்த நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு அப்படியே சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

ரியாலிட்டி ஷோ
சின்னத்திரையின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிய அந்த சிரிப்பழகிக்கு அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதே போல ஏகப்பட்ட கடை திறப்பு விழாக்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோத கலந்து கொண்டு வந்தார்.

எல்லாம் போச்சு
புதிதாக கிடைத்த பிரபலத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க தொடங்கிய நிலையிலேயே அடுத்த லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், எல்லாம் போச்சே என அவர் புலம்பி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்க தொடங்கி உள்ளனர்.

இதே புலம்பல் தான்
இவர் மட்டுமின்றி இந்த கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்புகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் புலம்பல்களும் தற்போது அதே தான். ஜாலியாக நடைபெற்று வந்த சின்னத்திரை படப்பிடிப்புகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











