இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?
சென்னை: சமீபத்தில், நடந்த ஷூட்டிங் ஸ்பாட் விபத்து, இந்தியளவில் எதிரொலித்தது. பரிதாபமாக உயிர் பலியும் ஏற்பட்ட நிலையில், படக்குழுவை சுற்றி விசாரணை வளையம் சூழ்ந்துள்ளது.
ஒன்பது நாட்களாக அதுகுறித்து, வாயே திறக்காமல், இருந்த வந்த அந்த பிரம்மாண்டத்துக்கு, மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம், தயாரிப்பு தரப்பு டார்ச்சர் மற்றும் வேர்ல்ட் நடிகரின் கடுப்பு என மொத்தமாக சூழ்ந்து கொள்ள, தாங்க முடியாமல் வெடித்து விட்டார்.
தானும் அந்த விபத்தில், சிக்கி ஒரே அடியாக போய் சேர்ந்திருக்கலாம் என்று அவர் சொல்ல ஒரு முக்கிய காரணம் இருக்காம்.

உடனடியாக
இப்படி ஒரு அசம்பாவிதமான விஷயம் நடந்த உடனடியாக, அந்த வேர்ல்ட் நடிகரும், படக்குழுவும் பதறி அடித்துக் கொண்டு, பொது மக்களுக்கு, சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பின. ஆனால், இந்த விஷயம் குறித்து, அந்த பிரம்மாண்டம் மட்டும் எந்த ஒரு கருத்தையும் வெளியிட வில்லை.

நீங்க தான் காரணம்
அந்த அசம்பாவித சம்பவத்துக்கு, அவர் தான், காரணம், இவர் தான் பொறுப்பு, கொஞ்சம் பார்த்து செய்திருக்கக் கூடாதா? உயிர்களின் விலை என்ன அவ்வளவு கேவலம் ஆகிடுச்சா? எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என அனைத்து தரப்புகளில் இருந்தும் சரமாரியாக அம்புகள் தாக்கி உள்ளன.

விஷயம் கை மீறிப் போனது
விபத்து என்று சொல்லி தப்பி விடலாம், என நினைத்த நிலையில், விசாரணை வளையம் மத்திக்கு சென்ற நிலையில், விஷயம் கை மீறிப் போயிடுச்சு, இனிமே நாமும் மக்களிடம் மன்றாடி நின்றால் தான் கொஞ்சமாவது தப்பிக்கலாம், என சிலர் கொடுத்த யோசனையின் பேரிலேயே இப்படி பொங்கி இருக்கிறாராம்.

காசு கொடுக்குறோம்ல
எவ்வளவு செலவு ஆகுதுன்னு, சொன்னாலும், கணக்கு பார்க்காம, காசு கொடுக்குறோம்ல, இதை கூடவா? கவனமா பார்க்க மாட்டீங்க, இதுல பிரச்சனை ஆகும்னு கொஞ்சம் கூட ஏன் நீங்க யோசிக்கலை? என தயாரிப்பு தரப்பு, பிரம்மாண்டத்தை கண்டபடி விளாசியதே, அவர் இப்படி மனம் நொந்து வெடித்தற்கான காரணம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











