படத்தில் கமிட்டான ஹீரோயினை பிரைவேட் பார்ட்டிக்கு கூப்பிட்ட யங் ஹீரோ.. நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?

By Staff

ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் ஒருவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் டாப் ஹீரோயின்களுடன் பணியாற்றும் வாய்ப்புகள் அவருக்கு மச்சம் போல கிடைத்து வருவதால் அந்த ஆட்டக்கார நடிகையிடம் தம்பி கொஞ்சம் அத்துமீறி பார்க்கலாம் என நினைத்த நிலையில், நடிகை அதுக்கு வேற ஆள பாருடான்னு நடிகை படத்தை விட்டே வெளியேறி விட்டதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

பல கோடி கொடுத்தாலும் கவர்ச்சி பாடலுக்கு கூட மோசமாக குத்தாட்டம் போட மாட்டேன். என்னோட டான்ஸ் பிடிச்சு ரசிகர்கள் பார்த்தால் பார்க்கட்டும் என தொடர்ந்து நடித்து தூள் கிளப்பி வருகிறார் அந்த டோலிவுட்டின் இளம் நடிகை.

gossip kollywood tollywood


பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்க பட வாய்ப்புகள் வந்தாலும், யாருடன் நடிக்க வேண்டும் என்பதை கவனமாக தேர்வு செய்தே நடித்து வருகிறாராம். ஏனென்றால் சினிமாவை பற்றி அவர் அந்தளவுக்கு மோசமான விஷயங்களை கேள்விப்பட்டுள்ளாராம்.

உஷாரான நடிகை: அட்ஜெஸ்ட்மெண்ட், நடிகரின் வீட்டுக்கு விருந்து சாப்பிடுவது உள்ளிட்ட எந்தவொரு கண்டிஷனுக்கும் ஆரம்பத்திலேயே நோ சொல்லிவிட்டுத்தான் நடிகை படங்களை புக் செய்து வருகிறார் என்கின்றனர். சென்சேஷனல் நடிகையாக அவர் வலம் வரும் நிலையில், பல படங்களில் அவரை போட்டிப் போட்டுக் கொண்டு இளம் நடிகர்கள் முதல் டாப் நடிகர்கள் வரை கமிட் செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், எல்லா வகையிலும் நடிகை உஷாராகவே புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருவதாகவும் படத்திற்கு கமிட் ஆகும் போது எந்தவொரு தப்பான விஷயமோ செய்கைகளோ இருந்தால் கூட நடிகை முகத்தில் அடித்தது போல குட் பை சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாராம்.

பிரைவேட் பார்ட்டிக்கு பிளான் போட்ட யங் ஹீரோ: முத்தின கத்தரிக்காய் நடிகையுடன் நடித்த அந்த யங் ஹீரோ டான்ஸ் குயினை பார்த்து ரொம்பவே ஃபீலிங்ஸ் ஆகிவிட்டாராம். எப்படியாவது இந்த படத்தில் நடிகையை புக் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை டார்ச்சர் செய்த நிலையில், அவர்களின் தயவால் நடிகை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஹீரோவும் பார்க்க நல்லாத்தான் இருக்கிறார். எந்தவொரு பிரச்சனையும் இல்லாத நபராக இருக்கிறார் என நடிகை நினைத்துக்கொண்டிருந்த நிலையில், படத்தில் கமிட்டான ஒரே வாரத்தில் நடிகையுடன் தினமும் போனில் பேசுவது, அவரை அடிக்கடி சந்திப்பது, ரிஹர்சல் என்கிற பெயரில் கண்ட இடத்தில் தொடுவது என எல்லை மீறி உள்ளாராம்.

கம்பி நீட்டிய நடிகை: கடைசியாக பிரைவேட் பார்ட்டிக்கு நடிகர் பக்காவாக பீச்சில் ரெசார்ட் ஒன்றை புக் செய்து நடிகையிடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாமா? என பிட்டு போட நடிகரின் உள்நோக்கத்தை புரிந்துக் கொண்ட நடிகை கண்டிப்பா வரேன் என சொல்லிவிட்டு தயாரிப்பாளருக்கு போன் போட்டு வேறு நடிகையை புக் செஞ்சிடுங்க, இப்போதைக்கு எனக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்றே சொல்லிவிட்டார் என கிசுகிசுக்கள் தீயாக பரவி வருகின்றன. தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதற்கு பின்னணியில் நடிகர் தான் உள்ளார் என்பது தெரிந்த நிலையிலும், எதுவும் செய்ய முடியாமல், நடிகையை மாற்றிவிட்டு புதிதாக ஒரு நடிகையை தேடி வருவதாக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X