எக்ஸ் கணவர் கால் பண்ணாலும் ‘கட்’ பண்றாங்களாம் அந்த விவகாரத்து நடிகை.. என்ன மேட்டர் தெரியுமா?

By Staff

சென்னை: விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின்னர் எக்ஸ் கணவருடன் எந்த பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ள நடிகை விரும்பவில்லையாம்.

நடிகரின் புதிய பட ரிலீஸ் விழா மற்றும் டின்னருக்கு அழைத்த போதும் வர மறுத்து விட்டாராம் அந்த நடிகை.

இந்நிலையில், போன் கால் செய்தாலும் நடிகை 'கட்' செய்து விடுவதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன.

முறிந்த உறவு

முறிந்த உறவு

பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நட்சத்திர ஜோடி கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஈகோ கிளாஷ் காரணமாகத் தான் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்றும் நடிகையின் சமீபத்திய நடவடிக்கைகள் சரியாக இல்லை என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின.

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

நடிகரின் குடும்பம் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதே இத்துடன் நடிப்பை கொஞ்சம் நிறுத்தி வைத்து விட்டு குழந்தையை பெற்றுக் கொண்டு திரும்பவும் நடிக்க போகலாமே என்றதும், வாடகைத் தாய் மூலம் குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளுங்கள் என நடிகை சொன்னது தான் விவாகரத்து வரை வர காரணமே என்றும் வெளியான தகவல்கள் நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

குடைச்சல்

குடைச்சல்

நடிகருக்கும் நடிகைக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மனக்கசப்பு எழுந்த நிலையில், அவர்களே அந்த விஷயத்தை டீல் பண்ணட்டும் என நினைக்காமல் இடையே பெரியவர்கள் தலையிட்டது தான் ஒட்டுமொத்த உறவும் முறிவுக்கு வர காரணம் என்கின்றனர். பிரிவுக்கு பிறகு நடிகர் மட்டுமின்றி நடிகரின் குடும்பத்தாருடன் ஒட்டு உறவே வைக்கக் கூடாது என நடிகை தீர்மானமே எடுத்து விட்டாராம்.

கவர்ச்சி ரூட்டில்

கவர்ச்சி ரூட்டில்

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நடிகை விடுதலை பறவையான நிலையில், தன் இஷ்டத்துக்கு தனக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொண்டும் குத்து பாடலுக்கு நடனமாடியும் வருகிறார். ஆனால், நடிகை என்ன செய்தாலும், அது அந்த நடிகரின் குடும்பத்தையே பாதிப்பதாக பரவும் தகவல்கள் நடிகையை மீண்டும் கடுப்பாக்கி உள்ளதாம்.

கால் பண்ண கணவர்

கால் பண்ண கணவர்

சமீபத்தில், நடிகை சரக்கு விளம்பரம் உள்ளிட்டவற்றில் நடித்து வருவதை பார்த்த நடிகர் நடிகைக்கே போன் செய்து திட்டிவிட்டாராம். அதுவரை நடிகரின் போனை அட்டென்ட் செய்து வந்த நடிகை அதற்கு பிறகு கணவர் கால் செய்தால் கூட எடுக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர்.

நண்பராக கூட வேண்டாம்

நண்பராக கூட வேண்டாம்

அந்த நிகழ்வுக்கு பிறகு மனைவியிடம் சாரி சொல்லி சமாளிக்க நினைத்து பல முறை கால் செய்தும் அதை கட் செய்து வந்த நடிகை இனிமேல் நண்பர்களாக கூட இருக்க வேண்டாம் என அதிரடியாக மெசேஜ் போட்டு விட்டதாகவும் பக்கத்து ஸ்டேட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X