ஒரு படம் ஹிட்டானாலே தலைகால் புரிய மாட்டேங்குதே... லவ்வர் படம் அவுட் ஆக ஹீரோதான் காரணமாம்!

By

சென்னை: 'ஒரு படம் ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்களுக்கு தலைகால் புரியமாட்டேங்குது, அதுக்கான விலைதான் இது' என்று புலம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

தெலுங்கில் ஹிட்டான ரெட்டி பட ஹீரோ அவர். அடுத்தப் படத்தின் மூலம் தமிழுக்கும் வந்தார். அடுத்து இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார்.

ரெட்டி படம் ஹிட்டானதால் நடிகர் இன்னும் அந்தப் போதையிலேயே இருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது, அந்த பேமஸ் லவ்வர் படம்.

நான்கு ஹீரோயின்கள்

நான்கு ஹீரோயின்கள்

இது தமிழிலும் டப் ஆகி ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தில் நான்கு ஹீரோயின்கள். மற்ற மொழிக்கும் தேவைப்படும் என்று இப்படியாம். ரெட்டி படம் போல இதிலும் வல்கர் காட்சிகளாம். படத்தின் டீசர் வெளியான போதே, ரெட்டி பாதிப்பில் இருப்பதாக விமர்சித்தார்கள் ரசிகர்கள். சில ஆபாசமான வசனங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது.

இப்படியாயிடுச்சே

இப்படியாயிடுச்சே

படத்தின் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தானாம். அதனால் வந்த வேகத்திலேயே படம் அவுட். ஓவர் எதிர்பார்ப்பில் இருந்தவர்கள், என்னடா இப்படியாயிடுச்சே என்று நொந்து போய்விட்டார் களாம். முதல் நாள் கூட்டம் ஓகேவாக இருக்க, அடுத்தடுத்த நாள்களில் கூட்டம் அள்ளும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், சொல்லி வைத்த மாதிரி யாரும் வரவில்லை.

சுத்தமாக அவுட்

சுத்தமாக அவுட்

இது எப்படி என்று ஆச்சரியத்தில் இருக்கிறது டோலிவுட். இதற்கிடையே அந்த நடிகரின் முந்தைய படங்கள் தமிழில் சுமாரான வசூலைப் பார்த்தது. ஆனால், இந்தப் படம் இங்கும் சுத்தமாக அவுட். கவலையில் இருக்கிறார்கள் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள். இதற்கிடையே படம் தோல்வி அடைந்ததை அடுத்து டோலிவுட்டில் பரபரப்பு நியூஸ் ஒன்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் முட்டிக்கொண்டதாம், ஷூட்டிங்கின் போது.

ஓவர் ஆர்வத்தில்

ஓவர் ஆர்வத்தில்

அதனால் ஹீரோதான், கொஞ்சம் ஓவர் ஆர்வத்தில் படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை இயக்கினாராம். ஹிட் ஹீரோ என்பதால் படத்தின் இயக்குனரால் எதுவும் பேசமுடியவில்லை. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம் என்கிறார்கள். 'ஒரு படம் ஹிட்டானாலே தலைகால் புரியமாட்டேங்குது நம்ம ஹீரோக்களுக்கு. இந்த தோல்வியாவது பாடத்தைக் கொடுக்கட்டும்' என்கிறார்கள் டோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X