»   »  ரீமாவை அடக்க ரம்யா

ரீமாவை அடக்க ரம்யா

Subscribe to Oneindia Tamil

ரீமா சென் காட்டிய ஓவர் பந்தா காரணமாக கிரி படத்தில் அவரை ஓரங்கட்டி விட்டு, குத்து பட ஹீரோயின்ரம்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படுக்குறதுக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் நரி என்ற பழமொழி ரீமா சென்னுக்குநிறையவே பொருந்தும்.

தமிழில் அவ்வளவாக பிரகாசிக்க முடியாத ரீமா சென், எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறேன்; கவர்ச்சிக்குஎப்போதும் நோ சொல்ல மாட்டேன் என்று சான்சுக்காக கூறி வருகிறார். உடன் நடிக்கும் நடிகர்களோடுஅநியாயத்துக்கு ஒட்டி உறவாடி, அவர்களது அடுத்த படத்தில் தன்னை சிபார்சு செய்யும்படி சோப்பு போடுகிறார்.

இப்படி பிரம்மப்பிரயத்தனம் செய்து வாய்ப்பு பெற்றுவிட்டால், அதன் பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் அவர் காட்டும்பந்தாவை தாங்க முடியவில்லை என்கிறார்கள்.

தெலுங்கில் நான்தான் நம்பர் ஒன்னாக்கும், இந்தியில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள், டேட்ஸ் எதுவும் இல்லாததால்போக முடியவில்லை என்று அளந்து விடும் ரீமா சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை.

குஷ்பு தயாரிப்பில் அவரது கணவர் சுந்தர்.சி இயக்கும் கிரி படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரீமாவை புக்செய்தார்கள். இப்போது ரீமா காட்டும் பந்தாவால் கடுப்பாகிப் போன சுந்தர்.சி, ரீமாவுக்குப் போட்டியாக குத்துரம்யாவையும் வேண்டுமென்றே படத்தில் இறக்கி விட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு ஆடத்தான் ரம்யாவைக் கூப்பிட்டார்கள். கடைசியில் ரீமாவை அடக்க வேறு வழிதெரியாமல், ரம்யாவின் கேரக்டரை பில்ட் அப் செய்து விட்டாராம். இதில் குஷ்புவின் பங்கும் நிறையவேஎன்கிறார்கள்.

வீட்டிலும் ரீமாவுக்கு ஏதோ பிரச்சனை என்கிறார்கள். பெற்றோர் அவரை விட்டுப் பிரிந்து விட்டதால் தனிக்கட்டையாகிவிட்ட ரீமாவுக்கு பொழுதுபோக்கே ஹீரோக்களுக்கு போன் செய்து கடலை போடுவது தான்என்றாகிவிட்டது. இதனால் இவரது போன் வந்தாலே தெரித்து ஓடுகிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்.

கொசுறு:

வழக்கமாகவே, காற்றோட்டமான உடைகளைப் போட்டுக் கொண்டு, சூட்டிங் ஸ்பாட்டில் அக்கம் பக்கம்இருப்பவர்களை நெளிய வைப்பார். அண்மையில் செல்லமே பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு ரீமா சேலைகட்டி வந்த அழகை கோடம்பாக்கம் கண்கள் விரியப் பேசுகிறது.

சேலையை இப்படிக் கூட கட்ட முடியுமா என்று விழாவுக்கு வந்தவர்களை வியக்க வைத்துவிட்டார் ரீமா.எல்லோரும் விழாவை விட்டுவிட்டு ரீமா மீது தான் கண்ணாய் இருந்தார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil