»   »  தில் ரிம்பி!

தில் ரிம்பி!

Subscribe to Oneindia Tamil

அஸ்ஸாமிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள அழகுப் பொம்மை ரிம்பி படு வேகமாகஇருக்கிறார். நடிப்பிலும், கிளாமரிலும்.

பெயர் புரியாமல் போனாலும் கூட ரிம்பியின் கிளாமர் எல்லோருக்கும் ரொம்பநன்றாகவே புரியும். அந்த அளவுக்கு ரிம்பி, எம்பி நெம்புகிறார்.

பாலி படம்தான் ரிம்பியின் முதல் தமிழ்ப் படம். சுத்தமாக தமிழே தெரியாவிட்டாலும்கூட சொல்லிக் கொடுப்பதை கிளிப் பிள்ளை மாதி> அப்படியே பிடித்துக் கொண்டுகக்கி விடுகிறாராம்.

கவர்ச்சி காட்டுவதற்கு மட்டும் சொல்லித் தராமலேயே துள்ளி விளையாடுகிறாராம்.

ரிம்பிக்கு தமிழ் சினிமாதான் புதிது. ஆனால் ஏற்கனவே நடித்த அனுபவம் உண்டாம்.அசாமிய மொழியில் ஒரு படத்தில் நடித்த அவரது ஸ்டில்களைப் பார்த்து விட்டுத்தான்பாலி படத்தில் நடிக்கக் கூப்பிட்டார்களாம்.

நடிப்பில் அம்மணி இன்னும் பிளஸ்டூ பாவைதான் என்றாலும் படிப்பில் பி.ஏ.முடித்தவராம். தொடர்ந்து படிக்கப் போகிறாராம். அப்படியே நடிப்பையும் தொடரப்போகிறாராம்.

அசாமி, தமிழ் என இரு மொழிகளில் நடித்து விட்ட ரிம்பி அடுத்த வங்க மொழிப்படத்தில் திறமை காட்டவுள்ளார்.

மொழி தெரியாமல் எப்படி நடிக்க முடிகிறது என்று ரிம்பியிடம் கேட்டால், அதுதான்எனக்கும் புரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கு மொழி ஏது? பாலி படமும்உணர்வுகளைப் பற்றிய படம்தான். மொழயே புரியாமல் வசனம் பேசி நடிப்பது கூடஒரு தி>ல்லாகத்தான் உள்ளது என்கிறார் ரிம்பி.

பாலி படத்தில் கிராமத்துப் பெண்ணாக அதிலும், மலைவாசிப் பெண்ணாக நடிக்கிறார்பாலி. இதற்காக மலை வாசஸ்தலம் ஒன்றில் கூடாரமிட்டு படத்தை எடுத்துள்ளனர்.

ரிம்பி குறித்த ஒரு கிசுகிசு. ஷூட்டிங்குக்காக போன இடத்தில் ரிம்பிக்கும், படத்தின்முக்கிய நபருக்கும் ஏடாகூடமாக நட்பு ஏற்பட்டு விட்டதாம். இதன் விளைவாகரிம்பிக்கு மாங்காயைப் பார்த்தால் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டதாம்.

கலங்கிப் போன தயாரிப்பாளரும், அந்த நபரும் ரிம்பியை சத்தம் போடாமல் கூட்டிக்கொண்டு போய், சுத்தமாக திரும்ப அழைத்து வந்தார்களாம்.

பாலி வருவதற்குள் லாலியா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil