»   »  எலியும், பூனையுமாக இருக்கும் வாரிசு நடிகை, செல்ஃபி நடிகை

எலியும், பூனையுமாக இருக்கும் வாரிசு நடிகை, செல்ஃபி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து கோலிவுட் வந்துள்ள வாரிசு நடிகையும், செல்ஃபி நடிகையும் ஒருவரையொருவர் எதிரிகளாக பார்க்கிறார்களாம்.

கேரளாவில் இருந்து வந்துள்ள வாரிசு நடிகை தான் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். லீடர், வெளிச்சம், சிறுத்தை, சண்டக்கோழி என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

Rivalry between two leading ladies

இந்நிலையில் தான் அம்மணி சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்திவிட்டார். என்னடா இந்த பொண்ணு இப்படி சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டதே என்று தயாரிப்பாளர்கள் முணுமுணுத்த நிலையில் கேரளாவில் இருந்து செல்ஃபி நடிகை வந்தார்.

பார்க்க அழகாக இருப்பதுடன் அம்சமாகவும் நடிக்கிறார். இதனால் வாரிசு நடிகைக்கு ஏன் அவ்வளவு கொடுக்க வேண்டும் செல்ஃபி நடிகையை ஒப்பந்தம் செய்யலாமே என தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

வாரிசு நடிகையும், செல்ஃபி நடிகையும் ஒருவரையொருவர் பார்த்தால் எதிரிகள் போன்று நடந்து கொள்கிறார்களாம். தனிப்பட்ட முறையில் சண்டை எல்லாம் இல்லை தொழில் போட்டி மட்டுமே உள்ளது. அதற்கு தான் இந்த கோபம்.

English summary
Rivalry is brewing between two leading ladies of Kollywood who are basically from Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil