தன்னை விட 17 வயது சிறிய நடிகையை காதலிக்கும் ரப்பர் பாடி நடிகர்
சென்னை: ரப்பர் பாடி நடிகர் மீண்டும் காதலில் விழுந்துள்ளாராம்.
ரப்பர் பாடி நடிகர் முன்னணி நடிகையை காதலித்து பிரிந்தார். கிட்டத்தட்ட திருமணம் வரை சென்று காதல் முறிந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் வேறு, வேறு ஆட்களை காதலித்தனர்.
ரப்பர் பாடியின் பெயர் தற்போது ஒரு அழகிய, திறமை வாய்ந்த நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது.

நடிகை
ரப்பர் பாடி நடிகர் தற்போது மெர்சலாக டான்ஸ் ஆடும் நடிகையை காதலிக்கிறாராம். இருவருக்கும் இடையே 17 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் வயது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று காதலிக்கிறார்களாம்.

முறிவு
ரப்பர் பாடி நடிகர், அந்த நடிகையின் காதல் திருமணத்தில் முடியுமா இல்லை இந்த காதலும் முறிந்துவிடுமா என்று தெரியவில்லை. நடிகையோ தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்கிறார். ஆனால் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்றும் விவரிக்கிறார். என்னமோ போங்கம்மா.

காதலி
அந்த நடிகைக்கு முன்பு ரப்பர் பாடி நடிகரும், தங்கச்சி நடிகையும் காதலித்து வந்தனர். அப்பா, மகள் வயது உள்ள இருவரும் காதலித்தது பலரையும் வியக்க வைத்தது. அந்த காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

நடிகைகள்
பாலிவுட் நடிகை ஒருவரின் பெயரும் ரப்பர் பாடியுடன் சேர்ந்து அடிபட்டது. ரப்பர் பாடி செல்லும் இடம் எல்லாம் அவர் பெயர் யாராவது ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











