அவளும் வேணும்.. இந்த டீல் ஓகேயா இல்லையா?.. ஒத்துக்கொள்ளாத நடிகை?.. கழற்றிவிட்ட காதல் நடிகர்
சென்னை: நடிகர் பேசிய டீலுக்கு நடிகை ஒத்துக்கொள்ளாததால்தான் அந்த காதல் ஜோடி பிரிந்ததாக கிசிகிசுக்கப்படுகிறது.
பக்கத்து மாநிலத்தை சேர்ந்த நடிகை மதிப்பிற்குரிய படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகை கவர்ச்சி காண்பிக்கவும் தவறவில்லை. நிலைமை இப்படி இருக்க வாரிசு நடிகருடன் நடித்தபோது கெமிஸ்ட்ரி தீ பற்றிக்கொள்ள அந்தப் படத்தில் கவர்ச்சி காண்பிப்பதில் உச்சத்துக்கே சென்றார்.
காதல்: பிறகு காதலில் விழுந்த இருவரும் ரொம்பவே தீவிரமாக காதலித்தனர். இருவரும் நிச்சயம் கல்யாணம் செய்துகொள்வார்கள் என்று சென்னையிலிருந்து நடிகரின் சொந்த ஊர்வரை பேசப்பட்டது. நிலைமை இப்படி இருக்க இரண்டு பேரும் தீடிரென பிரிந்தனர். பிரிந்தது குறித்து இருவரும் அமைதியாக இருந்தாலும் அதற்கு காரணம் நடிகரின் சித்து விளையாட்டுதான் என்று இன்னமும் பேசப்படுகிறது.

விரக்தியில் நடிகை: இந்த நடிகை பிடித்தவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். தனக்கு பிடித்தவர் எதாவது கேட்டால் உயிரை கொடுத்தாவது நிறைவேற்றிவிடும் பழக்கமுடையவராம். அப்படி அந்த நடிகருக்காக பல விஷயங்களை செய்தாலும் நடிகர் பிரிந்து சென்றது நடிகையை விரக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. மேலும் இன்னொரு காதலை செய்யவே கூடாது என்ற முடிவையும் அவர் எடுத்திருந்தார்.
காதல் என் காதல் அது கண்ணீருல: சில காலம் விரக்தியாக இருந்த நடிகை இப்படியே இருந்தால் கரியர் காணாமல் போய்விடும் என சுதாரித்து மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டினார். அந்தக் காலகட்டத்தில் கவர்ச்சிக்கு தாராளம் காட்ட பட வாய்ப்புகள் குவிந்துகொண்டே இருந்தன. நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி எல்லை மீறி சென்றதால் சிலர் விமர்சிக்கவும் செய்தனர். முக்கியமாக பல இழி சொல்கள் அவரை நோக்கி பிரயோகப்படுத்தப்பட்டன.
நிலைமை இப்படி இருக்க நடிகைக்கு இன்னொரு நடிகர் மீது காதல் வந்தது. அந்த நடிகர் இந்திய அளவில் பிரபலமானவர். ஆனால் என்ன ஒன்று அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். இருந்தாலும் நடிகரின் மீதான காதலை குறைத்துக்கொள்ள நடிகைக்கு மனமே வரவில்லை. பொது இடங்களுக்கு ஒன்றாக வருவது அவருக்காக எந்த எல்லைக்கு செல்லவும் தயாராக இருந்தது என அம்மணி அந்தக் காதலை அப்படி செய்தார்.
ஆனால் காண்டான நடிகரின் மனைவி நடிகையின் வீட்டுக்கே நேரடியாக சென்று சண்டை போட்ட கதையெல்லாம் உண்டாம். எந்த சண்டை வந்தாலும் நடிகரை நடிகையும், நடிகையை நடிகரும் விடுவதாக இல்லை. இதனால் நடிகரிடம் விவாகரத்து கேட்டாராம் மனைவி. அதற்கும் நடிகர் ஒத்துக்கொண்டாராம். நிலைமை இப்படி இருக்க ஒருநாள் தன்னுடைய குழந்தைகள் குறித்து யோசித்தாராம் நடிகர்.
உடனே நேராக நடிகையிடம் சென்ற அவர் விவாகரத்து பெற்றுவிட்டாலும் அவளையும் நான் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன். குழந்தைகள் வேறு இருக்கிறார்கள். அவர்களுக்காகவேனும் நான் அவளுடன் கொஞ்சமேனும் டச்சில் இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது என கூறினாராம்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகை விவாகரத்து பெற்றுவிட்டால் அவ்வளவுதான். வேண்டுமானால் மாதா மாதம் பணத்தை கொடுங்கள். ஆனால் நேரில் சென்று பார்க்கும் வேலையோ; அவளுடன் டச்சில் இருக்க வேண்டும் என்ற நினைப்போ இனிமேல் கூடாது என்று கூறினாராம். இல்லை அவளும் பாவம்தான் என கூற நடிகை கூடவே கூடாது என முரண்டு பிடித்தாராம்.
இதனையடுத்து குற்ற உணர்ச்சியோடு வாழ்வது எனக்கு சரிப்பட்டு வராது எனக்கு நீயும் வேண்டாம் அவளும் வேண்டாம் என்று முடிவெடுத்து நடிகையை பிரிந்துவிட்டாராம். அதேபோல் முதல் மனைவியோடும் சரி நடிகையோடும் சரி எந்தவித டச்சையும் வைத்துக்கொள்ளவில்லையாம் நடிகை. இந்த காதல் முறிவும் நடிகையை ரொம்பவே அப்செட்டாக்கிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











