கோட் நடிகரின் போஸ்டருக்கு பின்னால் இப்படி ஒரு விஷயமா?: நல்லா கெளப்புறாங்கய்யா
சென்னை: கோட் நடிகர் படத்தின் போஸ்டரை வெளியிட்டதற்கு பின்னால் ஒரு மெகா பிளான் இருப்பதாக சிலர் புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.
கோட் நடிகர் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார்கள்.
அவர்கள் வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்த்து போஸ்டரை வெளியிட்டனர்.

நன்கொடை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு லீடர் நடிகர் பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்துள்ளார். அவரின் ரசிகர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். கேரளாவில் உள்ள லீடரின் ரசிகர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்.

கோட் நடிகர்
லீடர் நடிகர் பெரிய தொகையை கொடுத்ததால் அவரை பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அதை மறக்கடிக்கவே கோட் நடிகரின் போஸ்டரை அவசரம் அவசரமாக வெளியிட்டதாக சிலர் புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். இது போன்ற காரணத்திற்காக எல்லாம் தனது பட போஸ்டரை வெளியிடுமாறு அடக்கும்பிடிக்கும் ஆள் இல்லை கோட் நடிகர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 1 கோடி
லீடர் நடிகரை விட டான்ஸ் மாஸ்டர் தான் கேரளாவுக்கு அதிக தொகையை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். மேலும் தானே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனுமதிக்குமாறும் அம்மாநில முதல்வரை சந்தித்து கேட்டுக் கொள்ள உள்ளார். அதனால் கோட் நடிகரின் போஸ்டர் வரும் முன்பே மக்கள் லீடரை விட்டு விட்டு டான்ஸ் மாஸ்டரை பற்றி பேசத் துவங்கிவிட்டனர்.

மோதல்
கோட் நடிகரின் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் இரண்டும் கெட்டான் நேரத்தில் வெளியானதை பார்த்து லீடரின் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஊரே தூங்கும் போது வெளியிட்டால் ட்விட்டரில் டிரெண்டாகத் தான் செய்யும் என்று கேலி செய்கிறார்கள். இந்த போஸ்டரால் லீடர், கோட் நடிகர்களின் ரசிகர்கள் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் எப்பொழுது தான் நிற்குமா?


Click it and Unblock the Notifications









