உச்ச ஹீரோவுக்கு ரூ.100 கோடி சம்பளம்... 3 பேரனுக்கும் தலா ரூ.25 கோடி டெபாசிட்... இதெல்லாம் நெசமா?
சென்னை: உச்ச நட்சத்திரம் அடுத்து நடிக்கும் படத்துக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்ச நட்சத்திரம் நடித்துள்ள அரச சபை படம் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்தப் படத்தில் நம்பர் நடிகை ஹீரோயினாக நடிக்கிறார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. முன்னாள் ஹீரோயின்கள் உட்பட படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம்.

நூறு கோடி ரூபாய்
முன்னணி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக உச்ச நட்சத்திரத்துக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தியாவில் இத்தனை கோடி சம்பளம் வாங்கும் ஒரே ஹீரோ அவர்தான் என்கிறார்கள்.

பேரன்களுக்கு
இது விஷயமில்லை. அவருக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கோடிகளில் தனது மூன்று பேரன்களுக்கும் தலா 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளாராம் உச்ச நட்சத்திரம்.

கோலிவுட் டாக்
அந்த டெப்பாசிட்டை மூன்று பேரும் 25 வயதுக்கு பிறகே எடுக்க முடியுமாம். மிச்ச 25 கோடியை தனக்காக பெற்றுள்ளார் என்கிறார்கள். இதுதான் கோலிவுட்டின் டாக்காக இருக்கிறது.

நடிப்புக்கு முழுக்கு
இதற்கிடையே இப்போது நடிக்கும் படத்துடன், நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அரசியலில் இறங்க போகிறார் என்றும் தீவிரமாக ஓடுகிறது ஒரு பேச்சு. இதெல்லாம் நெசமோ நெசமில்லையோ?


Click it and Unblock the Notifications











